நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஸ்டொக்கம் தோட்டமக்கள் தொழிலுக்கு செல்லாது தோட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வீதி மறியல் ஆர்பாட்டம் ஒன்றை 08.06.2018.வெள்ளிகிழமை காலையில் இருந்து முன்னெடுத்திருந்தனர்தோட்டங்கள் காடாக்கபடுவதாகவும் தோட்ட தொழிலாளர்களுக்கு அவசர நோய் ஏற்பட்டால் தொழிலாளர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நோயாளர் (ambulance) வண்டி வழங்கபடாமை குழந்தை பெறும் தாய்மார்களுக்கான கொடுப்பணவு என்பவற்றை வழங்காமை போன்ற கோறிக்கைகளை முன்வைத்து ஸ்டொக்கம் தோட்ட முகாமையாளர் இந்த தோட்டத்தில் இருந்து வெளியேறுமாறும் இந்த மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த ஆர்பாட்டமானது சாமிமலை ஹட்டன் பிரதான வீதியினை மறித்து இந் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டிருந்தமையும் குறிப்பிடதக்கது. இதேவேலை இந்த ஆரபாட்டத்தில் 200கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டதோடு ஸ்டொக்கம் தோட்ட தேயிலை தொழிற்சாலையில் இருந்து ஸ்டொக்கம் தோட்ட சந்திவரை பேரணி ஒன்று முன்னெடுக்கபட்டமையும் குறிப்பிடதக்கது.
தோட்ட தொழிலாளர்களாகிய நாங்கள் அட்டைகடியிலும் சிறுத்தை தாக்குதலுக்கும் முகம் கொடுத்து தொழில் புரிகின்றோம் ஆகவே எங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாத தோட்டமுகாமையாளர் தோட்டத்தை விட்டு வெளியேறுமாறு கோறிக்கை விடுத்தனர்.
இதேவேலை ஸ்டொக்கம் தோட்ட தொழிலாளர்களின் குற்றச்சாற்று குறித்த ஸ்டொக்கம் தோட்ட முகாமையாளரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோதும் அது பயனளிக்கவில்லை.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)