டிக்கோயா பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் போக்குவரத்து தடை!

0
189

ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் 45நிமிடம் போக்குவரத்து தடைஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் டிக்கோயா பகுதியில் வீசிய கடும் காற்றின் காரணமாக பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஹட்டன் பொகவந்தலாவ  ஹட்டன் மஸ்கெலியா ஹட்டன் நோட்டன் பிரீஜ் ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து சுமார் 45நிமிடங்கள் தடைபட்டிருந்ததாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 09.06.2018.சனிகிழமை காலை 11.30 மணி அளவில் இடம் பெற்றதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின் கம்பம் ஒன்று முறிந்து விழுந்தள்ளமையால் டிக்கோயா பகுதிக்கான மின்சாரமும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

இதேவேலை சம்பவ இடத்திற்கு வருகைதந்த பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இனைந்து குறித்த மரத்தினை அகற்றியபின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக ஹட்டன் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்

குறித்த பகுதிக்கான மின்சார தொடர்ந்தும் துண்டிக்கபட்டிருப்பதாகவும் இது தொடர்பான நடவடிக்கையினை மின்சார சபையினர் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

DSC02370

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here