மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் காலி மாவட்டம் ஹோமதொள தோட்டத்தில் அமைக்கப்பட்ட 25 தனி வீடுகள் மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டதுடன் அவர்களுக்கான காணி உரித்துகளும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சர் கயந்த கருணாதிலக, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் மேற்பார்வை உறுப்பினருமான எம். திலகராஜ், காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பந்து லால் பண்டாரிகொட மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்துக் கொண்டனர்.