குளிக்க சென்ற இளைஞன் சடலமாக மீட்பு; புஸ்ஸல்லாவையில் சோகம்!

0
141

இன்று (16) காலை புஸ்ஸல்லாவ வகுகபிட்டிய பாலவல பிரதேசத்தில் வசித்து வந்த துவான் தில்கான் (வயது 24) ஆறு ஒன்றுக்கு குளிக்க சென்ற இவர் சடலமாக மீட்கபட்டுள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது.

02
குறித்த இளைஞன் இன்று காலை தனது தனது சகோதரர்களுடன் ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். தம்பிமார்கள் இருவரும் பள்ளிக்கு செல்ல வேண்டும் என்ற காரணத்தினால். உடனடியாக குளித்து விட்டு சென்றுள்ளனர். பின் இவரை காணவில்லை என உரவினர்கள் தேடிய பொழுது இளைஞன் சடலமாக ஆற்றில் கிடப்பதை கண்டுள்ளனர். தொடர்ந்து சம்பவம் குறித்து புஸ்ஸல்லாவ பொலிஸாருக்கு அறிவிக்கபட்டு. மேலதிக விசாரணைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்க் கொண்டு வருகின்றனர்.

பா.திருஞானம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here