பிரதேச சபை தமிழ் உறுப்பினரை தோட்ட அதிகாரி தாக்க முயன்றமைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்- சப்புமல் கந்த தோட்டத்தில் சம்பவம்!!

0
148

சப்புமல் கந்த தோட்ட கடுபொல் பயிர் விவகாரத்தில் பிரதேச சபை தமிழ் உறுப்பினரை தோட்ட அதிகாரி தாக்க முயன்றமைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்இன்று மலையகத்தில் தேயிலை மற்றும் இறப்பர் பயிர்களுக்கு பதிலாக தோட்ட கம்பனிகள் கடுபொல் எனும் முள்ளுத்தேங்காய் பயிரினை பயிரிட்டு வருகின்றது. இந்த கடுபொல் எனும் முள்ளுத்தேங்காய் உற்பத்தி தொடர்பாக அதன் பாதக விளைவுகளை ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டுதான் வருகின்றன. அந்தவகையில் தொழிலாளர்களும் இதற்கெதிராக தமது அதிர்ப்தியினையும் ஆர்பாட்டங்களையும் மேற்கொண்டுதான் வருகின்றனர்.

நேற்று முன்தினம்(19ஆம் திகதி) கேகாலை மாவட்டம் தெரணியகலை லலான் பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் சப்புமல்கந்த தோட்டத்தில் வல்பொல் தோட்ட நிர்வாகம் கடுபொல் பயிர் நாட்டல் தடையை மீறி இரகசியமாக ஆட்களைக்கொண்டு பயிரிட்டுள்ளது.

அதனை கேள்விப்பட்ட தெஹியோவிட்டபிரதேசசபையின் வல்பொல தொகுதி தமிழ் உறுப்பினர் கே.நிபுன் உடனடியாக சம்பவயிடத்திற்கு சென்று தோட்ட அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தோட்ட அதிகாரி பிரதேசசபை
உறுப்பினரை தரக்குறைவாக பேசி அவரை தாக்க முற்பட்டுள்ளார். இதனால் தோட்ட மக்களுக்கும் தோட்ட
நிர்வாகத்திற்கும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை (20ஆம் திகதி) இதற்கு எதிராக சப்புமல் கந்த மேல்பிரிவு வல்பொல குரியான மேல்பிரிவு கீழ்ப்பிரிவு மாயின் கந்த இல 1 மாயின்கந்த இல 2 சப்புமல் கந்த இறப்பர் பிரிவு ஆகிய தோட்டப்பிரிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கடுபொல் தவறனை காணப்படும் குரியான தோட்டத்தில் வரக்கதன்ன பிரதான வீதியை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை
முன்னெடுத்தனர்.

இதன்போது மக்கள் பிரதேச சபை உறுப்பினரை தாக்க முற்பட்டமைக்கு மன்னிப்புகோரவேண்டும் என கோசங்களை எழுப்பியும் கடுபொல் பயிரை நாட்ட வேண்டாம் என்றும் தமது எதிர்பப்பினை வெளியிட்டனர். இதன்போது தெரணியகலை பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகைத்தந்து ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டும் மக்கள் தொடர்ந்து தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்.
(அவிசாவளை நிருபர்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here