ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் சிங்கள பாடசாலைக்கு அருகாமையில் நேருக்கு நேர் மோதிய டிப்பர் வாகனம் இரண்டு விபத்துநோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட் ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் சிங்கள பாடசாலைக்கு அருகாமையில் பால் ஏற்றிசென்ற டிப்பர் வாகனம் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து 21.06.2018.வியாழக்கிழமை காலை 08மணி அளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.
நோர்வூட் பெற்றோல் நிரப்பும் பகுதியில் இருந்து பொகவந்தலாவ பகுதியை நோக்கி பயணித்த பால் டிப்பர் வண்டி ஒன்றும் பொகவந்தலாவ வெஞ்சர் பகுதியில் இருந்து நோர்வூட் பகுதியை நோக்கி பயனித்த பால் டிப்பர் வண்டி ஒன்றுமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த விபத்தில் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லையெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவத்தில் ஒரு டிப்பர் வண்டிக்கு முழுமையான சேதம் ஏற்பட்டுள்ளதோடு மற்றுமொரு டிப்பர் வண்டிக்கு பகுதி அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
விபத்துக்குள்ளான டிப்பர் வண்டிகளை நோர்வூட் பொலிஸார் மீட்டு விபத்து தொடர்பிலான மேலதிக விசாரனைகலை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)