டிக்கோயாவில் உயர் தரத்துக்கு சேர்த்துக்கொள்ளும் மாணவர்களின் பெற்றோர்களிடம் லஞ்சம் வாங்கும் அதிபர்?

0
164

உயர் தரத்துக்கு மாணவர்களை உள்வாங்குவதற்கு 7 ஆயிரம் ரூபா பணத்தையும் ஒரு தம்ரோ” கதிரையையும்( லஞ்சமாக) அன்பளிப்பாக வழங்குமாறு பெற்றோர்களிடம் அறவிட்டு வருவதாக டிக்கோயா பகுதியில் உள்ள பாடாசாலையொன்றின் அதிபருக்கு எதிராக முறைப்பாடு எழுந்துள்ளது.

2018ம் ஆண்டிற்கு உயர்தரத்திற் மாணவர்களை அனுமதிக்கவேண்டுமானால் ஒவ்வொரு பெற்றௌர்களிடம் இருந்து 7 ஆயிரம் ருபா பணம் பெற்றுள்ளதோடு மேற்படி பெற்றோர்கள் தம்ரோ” கதிரைகளையும் பெற்று கொடுக்க வேண்டுமென குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலையின் அதிபர் வலியுறுத்தி வருவதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு பணத்தினை பெற்றுகொண்ட அதிபர் பெற்றோர்களிடம் இருந்து குறித்த பாடசாலையில் இருந்து உயர்தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ள எவ்வித பொருட்களும் பணமும் பெறவில்லையென கடிதம் ஒன்றினை வழங்கி அதில் கையொப்பம் பெற்று கொள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கல்வி தினைக்களத்தின் சட்டதிட்டங்களுக்கு அமையவூம் கல்வி அமைச்சினால் ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் அனுப்பட்டுள்ள சுற்றுநிருபத்தில் எந்த ஒரு மாணவரிடம் இருந்து அதிகளவிலான பணமும் பொருட்கள் சேகரிக்கபடுவது சட்டத்துக்கு புறம்பானது என நன்கு தெரிந்து கொண்ட அதிபர்கள் ஏன் அப்பாவி தோட்ட தொழிலாளர்களிடம் இருந்து அதிகளவிலான பணத்தை பெறுகிறார்கள்?

இன்று தோட்ட தொழிலாளர்களுக்கு மாதாந்தம் கிடைப்பதே வெறும் 8 ஆயிரம் ருபா தொடக்கம் 10ஆயிரம் ருபாவரையே வேதனத்தை பெறுகின்றார்கள் மாதாந்தம் பெறுகின்ற சம்பளத்தினை வைத்துகொண்டு தமது வாழ்க்கையை நாடாத்துவதில் பெறும் சிறமபடுகின்றனர் ஆனால் மலையக பாடசாலைகளில் உள்ள இது போன்ற அதிபர்கள் மாணவர்களின் அனுமதி என்ற பெயரில் அதிகளவிலான பணத்தினன பெறுபவர்களுக்கு எதிராக கல்வி அமைச்சும் கல்வி அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் தமது ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் ஹட்டன் வலயகல்வி பணிமனையின் பணிப்பாளர் பி.ஸ்ரீதரனிடம் தொடர்பு கொண்டு வினவினோம் பாடசாலை மாணவர்களை அனுமதிக்கும் போது அதிகமான பணம் வசூலிக்கும் அதிபர்கள் தொடர்பாக முறைபாடுகள் இருந்தால் உடனே அறிவிக்கும் மாறும் இந்த விடயம் தொடர்பில் டிக்கோயா பகுதியில் உள்ள பாடசாலையில் மாணவர்களுக்கு அதிகபணமும் தம்ரோ கதிரையும் பெற்று தருவதாக கிடைத்த முறைபாட்டுக்கமைய உடனடியாக ஹட்டன் வலயகல்வி பணிமனையின் பணிப்பாளர் என்ற ரீதியில் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here