தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு- பொகவந்தலாவையில் சம்பவம்

0
155

பொகவந்தலாவ கிலானிதோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் 28.06.2018.வியாழக்கிழமை மாலைவேலையில் மீட்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவ கிலானி தோட்டபகுதயில் உள்ள வீடு ஒன்றில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட கிலானி தோட்டமக்கள் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த பெண்ணை பொகவந்தலாவ வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேலை இடையில் உயிர் இழந்துள்ளதாகவும் இறந்த நிலையிலே வைத்திசாலைக்கு குறித்த பெண் கொண்டு வரப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர் .

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த பெண்ணுக்கும் அவரின் கணவரும் இடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கிலானி தோட்டத்திற்கு சொந்தமான காணியை குறித்த பெண்ணின் கணவர் பலாத்காரமாக பிடித்துள்ளதாகவும் அதற்கு எதிராக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் தோட்டநிர்வாகத்தால் முறைபாடு செய்யபட்டிருந்தது.

செய்யபட்ட முறைபாட்டுக்கமைய பெண்ணின் கணவரை 20.000 ரூபா தோட்ட நிர்வாகத்திற்கு செலுத்த வேண்டுமென பொலிஸ் நிலையத்தில் நிபந்தனை விதிக்கபட்டிருந்தது பொலிஸாரினால் வழங்கபட்ட நிபந்தனைக்கமைய கணவரின் மனைவி அந்த பணத்தினை செலுத்தியுள்ளதாகவும் மீண்டும் குறித்த காணி கணவரால் பலவந்தமாக பிடித்துள்ளதாகவும் தோட்டநிர்வாகத்தில் செய்யபட்ட முறைபாடு தனது மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து இருவருக்கும் ஏற்பட்ட வாய்தர்க்கதினாலே எனது மனைவி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸாருக்கு வழங்கபட்டுளள் வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

இது இவ்வாறு இருக்க பெண்ணின் மரணத்தில் பொலிஸாருக்கு சந்தேக எழுந்துள்ளதாகவும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கபட்டுள்ளதோடு ஹட்டன் நீதிவான் தலைமையில் மரண விசாரனைகள் இடம் பெற்று சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரதே பரீசோதனைக்காக டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிர் இழந்த பெண் 36வயதுடைய 03பிள்ளைகளின் தாயாரான போஜி பரமேஸ்வரி என்வரே உயிர் இழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here