பாடசாலைகளில் பழுதடையும் கணனிகளை திருத்தி அமைக்க ஐந்து மாகாணங்களில் விசேட வேலைத்திட்டம்!!

பாடசாலைகளில் பழுதடையும் கணனிகளை உடனுக்குடன் திருத்தி அமைப்பதற்காக கல்வி அமைச்சு விசேட வேலைத்திட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளது இதற்கமை ஐந்து மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட கல்வி வலங்களிலிருந்து வன்பொருள் தீர்வு குழுவுக்கு சேரத்துக்கொள்வதற்காக பயிற்சியளிக்கும் நிகழ்வு இன்று அட்டன் சீடா வள நிலையத்தில் இன்று 02.07.2018 ஆரம்பமானது.
இரண்டு பிரிவாக நடைபெறும் இந்த செயலமர்வானது முதற் பகுதியில் கணனி திருத்துவதனையும் அடுத்து பிரிவில் நெட் வேர்க் தொடர்பாகவும் பயிற்றுவிக்கவுள்ளன.
இந்த பயிற்சியின் பின் கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளில் பழுதடையும் கணனிகளை பழுதுபார்த்து மீண்டும் அதே நிலைக்கு கொண்டு வருவதும் பாடசாலைகளுக்கு பழுதுபாரப்பதற்காக செலவிடப்படும் பணத்தினை மிகுதிப்படுத்துவதும் இலத்திரனியல் உபகரணங்கள் கொள்வனவு செய்யும் போது தரமான உபகரணங்களை பெற்றுக்கொளவதும் இதன் நோக்கமாகும்.
அத்தோடு பாடசாலைகளில் தகவல் தொடர்பாடல் பாடத்தினையும் செயல் முறை பயிற்சிகள் எந்தவித தங்கு தடையும் இன்றி பெற்றுக்கொடுப்பது இதன மற்றுமொரு நோக்கமாகும்.
குறித்த பயிற்சி நெறிக்கு மத்திய ஊவா வடமத்திய சப்பிரகமுவ வடமேல் மாகாணங்களைச் சேர்ந்த சுமார் 40 மேற்பட்ட ஆசியர்கள் கலந்து கொண்டனர்.
கல்வி அமைச்சின் உதவிக்கல்விப்பணிப்பாளர் எம்.வி.டி.மலிந்த அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு ஊவா மாகாண கல்வி திணைக்களத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளர் ஆர்.பி.ஜயவர்தனஇஅட்டன் கல்வி வலயத்தின் உதவிக்கல்விப்பணிப்பாளர் போதரகம உட்பட வளவாளர்களான ஹேரத் அதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆக்கரப்பத்தனை நிருபர்