கூட்டுஒப்பந்தசார் தொழிற்சங்களுக்கு இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அழைப்பு!

0
105

தோட்ட தொழிலாளர்களின் புதிய சம்பள உடன்படிக்கை தொடர்பாக மிக விரைவில் கைச்சாத்திடவிருக்கும் நிலையில், எதிர்வரும் 6ம் திகதி (06.07.2018) பி.ப 2.00 மணிக்கு பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கத்தின் அமைச்சில் நடைபெறவிருக்கும் விசேட கலந்துரையாடலுக்கு கூட்டுஒப்பந்தசார் தொழிற்சங்கங்களான இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டு கமிட்டி ஆகிய தொழிற்சங்கங்க அமைப்புக்களுக்கு இ.தொ.கா தலைவரும், பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார் என இ.தொ.கா ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தோட்ட தொழிற்சங்கங்களுக்குமிடையில் 2016ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ம் திகதி கைச்சாத்திடப்பட்டிருந்தது.

எனினும், புதிய கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் மிக விரைவில் கைச்சாத்திடப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னோடி கலந்துரையாடல்கள் விசேட பேச்சுவார்த்தைகள் இதனோடு தொழிற்சங்கங்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் ஆகியவற்iயும் கருத்திற் கொண்டு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் முப்பெரும் தொழிற்சங்க அமைப்புகளிலும் புரிந்துணர்வு இருக்கவேண்டும் என்பதோடு, இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டு கமிட்டி ஆகியவற்றிற்கும் இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.தேவதாஸ்
ஊடக இணைப்பாளர்;

இதொகா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here