பெருந்தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்கள் தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தினை இம் முறை பெற்றுகொடுக்க வேண்டுமென தொழிலாளர் தேசியசங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதியகிராமங்கள் தோட்டஉட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் கோறிக்கை விடுத்துள்ளார்.
08.07.2018 ஞாயிற்றுகழமை சாமிமலை, மானளி, மாக்கொலை தோட்டம் ,சாமிமலை டஸ்ப்பி ஆகிய தோட்டபகுதியில் 100 தனிவீட்டுத் திட்டத்தை திறந்து வைத்து மக்கள் மத்தியில் உறையாற்றிய போதே இதனை தெரிவித்தார். இந்நிகழ்வின் போது அமைச்சர் உட்பட மத்திய மாகாணசபை உறுப்பினர்களான ஆர்.ராஜாராம், சோ.ஸ்ரீதரன்சரஸ்வதி சிவகுரு, சிங்பொன்னையா மனிதவள அபவிருத்தி நிறுவனத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமணி நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினர் பா.சிவநேசன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர் .
இதன் போது மேலும் உறையாற்றிய அமைச்சர் பழனி திகாம்பரம் கூட்டு ஒப்பந்த்தில் கைச்சாதிடுவோர்கள் இன்று அறிக்கை விடுகின்றனர் என்னை அமைச்சுப்பதவியை திறக்குமாறு ஆனால் நான் ஒன்று கேட்கின்றேன் இத்தனைவருடகாலமாக அமைச்ர்களாக இருந்தவர்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் அமைச்சர் பதவியை திறந்தார்களா?? இம் முறை எமது மக்களை ஏமாற்ற முடியாது தேயிலையின் விலை அதிகரித்து காணபடுகிறது எனவும் தெரிவித்தார்.
கடந்த முறை மக்கள் போராடி போராடி நிலையான சம்பளமும் கிடைக்கவில்லை நிலுவை பணமும் கிடைக்கவில்லை நாங்கள் அரசாங்கத்தோடு கலந்துரையாடி தினசரியில் இருந்து இரண்டு மாதத்திற்கு 6000ரூபா நிவாரண கொடுப்பணவாக பெற்று கொடுத்திருக்கின்றோம் நாங்கள் மக்களுக்கு நிவாரன பணம் பெற்று கொடுத்ததால் தான் மக்களுக்கு நிலுவை பணம் கிடைக்கவில்லையென மக்கள் மத்தியில் பெய்களை கூறிவருகின்றனர். கடந்த முறை தோட்ட தொழிலாளர்களுக்கு 1000ரூபா சம்பளத்தினை பெற்று கொடுப்பதாக கூறி மக்களை ஏமாற்றியவர்கள் இம் முறை அந்த சம்பளம் 750ரூபாவிற்கு குறைவடைந்திருக்கிறது.
இதுவரை காலமும் கூட்டுஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் தனி தனியாக கலந்துரையாடி கூட்டு ஒப்பந்ததில் கைச்சாத்திட்டவர்கள் இம் முறை அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து கலந்துரையாடி ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். ஆனால் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் கூறியிருந்தார் தோட்ட தொழிலாளர்களுக்கு இம் முறை அடிப்படை சம்பளம் 750ரூபா வழங்கபட வேண்டும் இல்லாவிட்டால் கூட்டு ஒப்பந்தத்தில் கைசச்சாத்திட போவதில்லையென தெரிவித்தார். அவ்வாறு அவர் செய்தால் அவரை நாங்கள் வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.
எஸ்.சதீஸ், க.கிஷாந்தன்