ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புகள் நடாத்துவதை எதிர்வரும் இரு வாரங்களில் முற்றாக தடை செய்ய நடவடிக்கை எடுப்பதாக மத்திய மாகாண ஆளுநர் நிலூக ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஞாயிறு தினங்களில் மத்திய மாகாணத்தில் தனியார் வகுப்புகள் நடத்துவதை தடை செய்யும் வகையில் சட்டம் இயற்றப்பட்டாலும், அவற்றில் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டுமென ஆளுநர் மேலும் தெரிவித்தார்.