கதிர்காமம் மாணிக்ககங்கையில் யானைகள் நீராடபடும் பகுதியில் பாரிய முதலை ஒன்றை வனவிலங்கு அதிகாரிகள் 17.07.2018.செவ்வாய்கிழமை காலை 09மணி அளவில் பிடித்துள்ளனர்கதிர்காமம் பருவகாலம் காரணமாக மாணிக்ககங்கையில் நீராடு மக்கள் மிக்க அவதானமாக நீராடுமாறு வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். குறித்த முதலை ஆறு அடி நீளம் கொண்டதாக வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
இதேவேலை குறித்த பகுதியில் மக்கள் சென்று நீராட வேண்டாம்மென்றும் கேட்டு கொண்டுள்ளனர்.
உயிருடன் பிடிக்கபட்ட முதலை யாலை வனபகுதியில் கொண்டு விடபட்டுள்ளதாக கதிர்காமம் வனவிலங்கு அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ்)