மலையக பெருந்தோட்ட சேவையாளர்களின் வீட்டு வசதிப் பிரச்சினையை அரசாங்கம் கண்டு கொள்வதில்லை. பெருந்தோட்ட அமைச்சருக்கு பலமுறை தெரிவித்தும் உரிய நடவடிக்கை இல்லை -என்கிறார் சட்டத்தரணி கா.மாரிமுத்து
இந்த நாட்டில் பெருந்தோட்டச் சேவையாளர்களுக்கும் வரலாறு உண்டு. 200 வருடங்களை கடந்த ஒரு வரலாற்றை நாம் பார்க்கின்ற போது பெருந்தோட்டங்களின் இன்றைய வளர்ச்சியின் பாரிய பங்குதாரர்கள் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தோட்ட
சேவையாளர்களே
எனினும் தோட்ட சேவையாளர்களின் வாழ்வியல் முன்னோக்கிச் செல்லாத நிலையை தோற்றுவித்துள்ளதாக பெருந்தோட்டச் சேவையாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து கவலை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சட்டத்தரணி கா.மாரிமுத்து விடுத்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
அவர்களுக்கான காணியும் தனித்தனி குடியிருப்புகளும் வழங்கப்பட வேண்டுமென்பதை கோரி நாம் பெருந்தோட்ட அமைச்சரின் கவனத்திற்கு பலமுறை கொண்டு வந்தும் பலன் கிட்டியதாகத் தெரியவில்லை. கம்பனிகளும் கூடரூபவ் இவர்களது விடயத்தில் அசௌகரியங்களை காட்டுகின்றன. எவருமே கண்டு கொள்ள முடியாத நிலை ஏற்படும் போது மேலும் பெருந்தோட்டங்களின் வளர்ச்சிக்கு சேவையாளர்களின் பங்களிப்பை எவ்வாறு முழுமையாக எதிர்பார்க்க முடியும்.
அவ்வாறானதொரு நிலையில் பெருந்தோட்ட அமைச்சர் இவர்களின் இந்த விடயத்தை கருத்தில் கொண்டு துரிதகதியில் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார் சட்டத்தரணி கா.மாரிமுத்து.
எஸ்.தேவதாஸ்