பொகவந்தலாவ நகரில் இருந்து கிலானி தோட்டத்திற்கு செல்லும் வீதி பல தடவை அடிகல் நாட்டி அறையும் குறையுமாக சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக புனரமைப்பு பணிகள் இடம்பெற்று தற்பொழுது புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தபட்டுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர் .சுமார் 30வருடகாலமாக இந்த வீதி குன்றும் குழியுமாகவும் மழைகாலங்களில் சேறும் சகதியுமாக காட்சியளிப்பதாகவும் கிலானி தோட்டமக்கள் மேலும் தெரிவித்தனர். ஆனால் தற்பொழுது குறித்த வீதியில் பாடசாலை மாணவர்களும் வாகனசாரதிகளும் பொதுமக்களும் போக்குவரத்தினை மேற்கொள்ளமுடியாத நிலை கானபடுகிறது.
குறித்த வீதியினை புனரமைப்பு பணிகளை நீயா நானா என போட்டி கொண்டு அரசியல் செய்து கொண்டு இருக்கின்றார்களே தவிர குறித்த வீதியினை புனரமைத்து மக்கள் பாவனைக்கு கையளிக்கும் பொறுப்பு எந்த ஒரு அரசியல்வாதிகளும் இதுவரையிலும் முன்வரவில்லை.
குறித்த கிலானி தோட்டவீதியினை புனரமைத்து தருவதாக கூறி நல்லாட்சி அரசாங்கத்ததை சார்ந்த அரசயல்வாதிகள் வந்து பார்வையிட்டு சென்ற போதும் இதுவரையிலும் இந்த வீதி புனரமைக்கபடவில்லை எனவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்
எனவே மலையக அரசியல் வாதிகளுக்கிடையில் போட்டியிடுவதை முன்னிட்டு மக்களுக்கு சேவை செய்வதில் முன்வரவேண்டுமென புத்திஜீவகள் கோறிக்கைவிடுக்கின்றனர்.
(பொகவந்தலாவ நிருபர்எஸ்.சதீஸ்)