லங்கம் பெருந்தோட்ட கம்பணி நிருவாகத்தின் கீழ் இயங்கும் அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கான நலன் புரிசேவைக்கான உதவு தொகையை ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சபைக்கு காலதாமதமாக அனுப்பிவைத்துள்ளதால் ஐந்தாம் ஆண்டு புலமை பரிட்சையில் சித்தியடைந்த தொழிலாளியின் பிள்ளைக்கு கிடைக்க வேண்டிய 15 ஆயிரம் ரூபாய் சன்மான தொகைக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.கிடைக்கவேண்டிய உதவி பணத்திற்கு ஆப்பு
இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள பாடசாலை பிள்ளையின் தந்தையான பெல்மோரல் தோட்ட தபால் விணியோக ஊழியராக பணியாற்றும் சொலமன் பீட்டர் என்பவர் பெல்மோரல் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க நுவரெலியா மாவட்ட அரசியல்வாதிகள் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரின் கோரிக்கையில் மேலும் தெரியவருவதாவது.
தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களின் சம்பளப் பணத்திலிருந்து பிடித்தெடுக்கும் ஒரு தொகை பணத்தை ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சபைக்கு அரையாண்டுக்கு ஒருமுறை அனுப்பி வைக்க வேண்டும் என்பது வழமையாகும்.
இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் பணத்தொகையினால் தொழிலாளர்கள் மற்றும் அவரர்களின் பிள்ளைகளின் மேலதிக கல்வி நடவடிக்கைகள் மற்றும் வைத்திய நலன் சார்ந்த விடங்களுக்கு ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சபை சன்மான தொகைகளை வழங்குவதும் வழமையாகும்.
இதனடிப்படையில் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சபை வருடம் ஒன்றுக்கு தொழிலாளர்களுடைய பிள்ளைகள் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் சித்தியெய்திய ஒன்பதனாயிரம் மாணவர்களுக்கு ரூபாய் 15 ஆயிரத்தை சன்மான தொகையாக வழங்கும் என அறிவித்துள்ளது.



இந்த தொகையில் மாணவராகளின் மேலதிகாரி கல்வி நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுக்கும் தொழிலாளர்களுக்கும் இத்தொகை நன்மையாக அமையும். இதற்கென தாம் தொழில் செய்யும் தோட்ட நிர்வாகத்திடம் விண்ணப்பிக்கும் போது இவ்விண்ணப்பத்தை தோட்ட நிர்வாகம் பரீசீலனை செய்து ஊழியர்கள் நம்பிக்கை பொறுப்பு நிதிய சபைக்கு அனுப்பி வைக்கும்.
இவ்வாறாக நுவரெலியா கல்வி வலையத்தில் இயங்கும் நுஃ ஹோல்புறூக் பாடசாலையில் கடந்த 2017ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீட்சையில் எனது பிள்ளை 163 புள்ளிகளை பெற்று சித்தியெய்துள்ளது என தெரிவித்துள்ள தந்தை
இத்தருனத்தில் தோட்டத் தொழிலின் ஊடாக கிடைக்கும் வருமானம் குடும்பத்தை வழிநடத்தக்கூட போதாத நிலையில் எனது பிள்ளையின் மேலதிக கல்வியை தொடர்ந்து முன்னெடுக்க பெல்மோரல் தோட்ட நிர்வாகத்தினூடாக ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சபையினால் புலமைப் பரிட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்காக வழங்கப்படும் 15ஆயிரம் ரூபாய் சன்மான தொகைக்கு விண்ணப்பித்தேன் என்றார்.
இவ்வாறு விண்ணப்பித்த விண்ணப்பத்திற்கு ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சபை கடந்த திகதி பதில் அனுப்பியுள்ளது.
இதில் தங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும்இ தோட்டம் நிர்வாகம் உங்களுடைய உதவு தொகையை நிதியை சபைக்கு அனுப்பி வைப்பதை தாமதமாக்கியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன் மூலம் அதிர்ச்சியடைந்த தான் தோட்ட நிர்வாகத்திடம் கடிதமூலமாக முறையிட்டு போதிலும் உரிய பதிலை நிர்வாகம் இதுவரை வழங்கவில்லை.நான் மூன்று பிள்ளைகளுக்கு தந்தை என தெரிவிக்கும் அவர் எனது ஆண் பிள்ளை அனுராதாபுரம் பல்கலைக்கழகத்தில் பொறியியலாளர் கற்கை நெற்றியில் ஈடுப்பட்டுள்ளதுடன் மேலும் ஒரு மகன் கொட்டக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் கற்று வருகின்றார்.
இந்த நிலையில் எனது கடைசி மகள் ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சையில் சிறந்த சித்தியடைந்துள்ளார்.
எப்பாடு பட்டாலும் பிள்ளைகளை சிறந்த முறையில் படிக்க வைக்க வேண்டும் என்ற இலக்கின் அடிப்படையில் தான் உழைத்து அதிலிருந்து பிடித்து அனுப்பப்படும் பணத்தின் ஊடாக ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய சபையின் சன்மான பணத்திற்கும் விண்ணப்பித்தேன்.ஆனால் இன்று எனது விண்ணப்பம் தோட்ட நிர்வாகத்தின் செயற்பாட்டால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் மனவருதர்மத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ள அவர் பிச்சை எடுத்தாவது எனது பிள்ளைகளின் கல்வியை தொடர்ந்து முன்னெடுக்கும் வகையில் ஈடுப்படுவேன் என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பணி முறையாக அவர்களின் சேவையை செய்யாததால் தொழிலாளர்களின் பிள்ளைகள் தங்களுக்கு கிடைக்கும் உதவு கொகைகளிலும் புறம்தள்ளப்படுகின்றனர்.எனது பிள்ளைக்கு நேர்ந்தது ஏனைய தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு ஏற்பட்டுவிடக்கூடாது.அதேவேளையில் என்னுடைய பிள்ளைக்கு கிடைக்கப்படவேண்டிய சன்மான தொகைக்கு பெல்மோரல் தோட்ட நிர்வாகம் பொறுப்பு கூறவேண்டும். அத்துடன் தோட்டம் நிர்வாகத்தின் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் என்னிடம் பண வசதிகள் இல்லை. ஆகையால் இந்த விடயத்தில் கல்வி அமைச்சர்கள் தொழிற்சங்கங்கள்இ நுவரெலியா மாவட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலையிட்டு நியாயமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கோரிக்கையைமுன்வைப்பதாக ஆவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அக்கரப்பத்தனை நிருபர்