நாட்டார் பாடலில் இரண்டாம் இடத்தை பெற்றுகொண்ட கெம்பியன் தமிழ் மகாவித்தியாலயத்திற்கு எம்.ராமேஸ்வரன் வாழ்த்து!!

0
175

அகிலஇலங்கை தேசியமட்டத்தில் நாட்டார் பாடலில் இரண்டாம் இடத்தை பெற்றுகொண்ட கெம்பியன் தமிழ் மகாவித்தியாலயத்திற்கு மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ராமேஸ்வரன் வாழ்த்துஅகில இலங்கை தேசியமட்டத்தில் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ கெம்பியன் தமிழ் மகா வித்தியாலயம் இம் முறை இடம் பெற்ற தமிழ் தினபோட்டியில் நாட்டார் பாடலில் அகிலஇலங்கை தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தை பெற்று மத்திய மாகாணகல்வி அமைச்சுக்கும் ஹட்டன் வலயகல்வி பணிமனைக்கும் கெம்பியன் தமிழ் மகாவித்தியாலயத்திற்கும் பெறுமை தேடி கொடுத்துள்ளது. இந் நிகழ்வில் கலந்து கொண்ட தரம்08 09 10மாணவர்களுக்கும் நாட்டார் பாடலினை பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் வித்தியாலயத்தின் அதிபருக்கும் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மறுதபாண்டிராமேஸ்வரன் இதன்போது தமது வாழ்த்தினை தெரிவித்துள்ளார் .

அவர்விடுத்துள்ள வாழ்த்துச்செய்தில் பெறுந்தோட்ட பாடசாலைகளை சார்ந்த மாணவர்கள் கல்வி துறையிலும் மாத்திரம் அல்ல கலைகலாசார போன்ற துறைகளிலும் நாங்கள் ஆளுமை உடையவர்கள் என்பதனை சாதித்து காட்டியிருக்கிறார்கள் மலையகத்தில் இதுபோன்ற மற்றய பாடசாலைகளில் உள்ள அதிபர் ஆசரியர்கள் மாணவர்களை ஊக்கிவிப்பதில் முன்வரவேண்டும் அவ்போதுதான் எமது சமூகம் எதிர்காலத்தில் ஒரு சிறந்த சமூகமாக முன்வரும் எனவும் தெரிவித்தார். இம் முறை ஹட்டன் கல்வி வலயம் க.பொ.சா.தர பரீட்சையிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்று இருக்கிறது. அந்தவகையில் பாடசாலையில் பணிபுரிகின்ற ஆசிரியர்கள் மேலும் முயற்சிசெய்தால் கொழும்பு பகுதியில் உள்ள பாடசாலைகளை விட எமது மலையக பகுதிகளில் உள்ள பாடசாலைகைலை மேலும் முன்கொண்டுவருவதற்கு எமது ஆசிரியார்களால் முடியும்

எங்களால் பாடசாலைகளுக்கான வலத்தை பெற்றுகொடுக்கமுடியும் அந்த வலத்தினை பிரயோசனமாக பயன்படுத்த வேண்டிய கடமை பாடசாலைகளில் உள்ள அதிபர் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. நாங்கள் பாடசாலைகளுக்கு சங்கீத உபகரணங்களை வழங்கி வருகின்றோம். இது போன்ற சங்கீத உபகரணங்களை பயன்படுத்தி மேலும் அதிகமான பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்கபடவேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here