பொகவந்தலாவையில் காணாமல் போன குடும்பஸ்த்தர் சடலமாக மீட்பு!!

0
176

பொகவந்தலாவ லெச்சுமி மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் கடந்த 04நாட்களாக காணாமல் போனநிலையில் 27.07.2018.வெள்ளிகிழமை பிற்பகல் 01.30மணி அளவில் காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் நோர்வூட் கேசல்கமுவ ஆறு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பொகவந்தலாவ லெச்சுமி மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த சின்னபையன் நிரஞ்சன் என்ற தனது மனைவியின் வீட்டுக்கு சென்றிருந்த வேலை கடந்த திங்கள் கிழமை மனைவி வீட்டில் உணவு உட்கொண்டு நித்திரையில் இருந்த நிலையில் காணாமல் போயிருந்ததாக கடந்த திங்கள் கிழமை இவரின் மனைவி நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்திருந்ததாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்

இதேவேலை குறித்த 34வயதுடைய திருமணம் முடித்த சின்னபைய்யன் நிரஞ்சன் என்ற குடும்பஸ்த்தரை தேடும் நடவடிக்கையில் தோட்டமக்கள் மற்றும் பொலிஸார் ஈடுபட்டிருந்த வேலை குறித்த குடும்பஸ்த்தர் இவ்வாறு சடலமாக மீட்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.

குறித்த சடலத்தின் மரண விசாரனைக்காக ஹட்டன் நீதவான் சம்பவ இடத்திற்கு வரவழைக்கபட்டு மரணவிசாரனைகள் இடம்பெற்றவுடன் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கபட உள்ளதாக நோர்வூட் பொலிஸார் மேலும் தெரிவிவத்னர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

எஸ்.சதீஸ், க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here