நுவரெலியாவில் மீண்டும் சிறுத்தை- அச்சத்தில் பெற்றோர்கள்

0
166
நுவரெலியா பரிசுத்த ஆரம்பகல்லூரிக்கு பின்புறம்  கல்வேஸ் பாதுகாக்கப்பட்ட வன பகுதிக்கு அருகாமையில் பாதையோரத்துக்கு மிக சமீபமாக  30.07.2018 அன்று காலை 10.30.மணிக்கும் 11.00 மணிக்கும் இடையில் சிறுத்தையின் நடமாட்டம் காணப்பட்டுள்ளது.

பாடசாலைக்கு 50 மீட்டர் தொலைவில் போனி ஒன்றை உணவுக்காக கொன்றுள்ளது.ஆயினும் அப்போனிக்குதிரை கானொன்றுக்குள் விழுந்ததால் இழுத்துச்செல்ல முடியாமலும் மக்கள் நடமாட்டம் இருந்த படியாலும் கைவிட்டு தப்பியோடியுள்ளது
இச்சிறுத்தையின் இச்செயலானது இன்று தான் முதற் தடவை என்பதல்ல கடந்த இரு மாதங்களுக்கு முன்பே இதன் நடமாட்டம் அவதானிக்கப்பட்டு வனபாதுகாப்புதிணைக்களத்துக்கும், பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டும் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது,  என்பது தெரியவில்லை.மீண்டும் இன்றைய நிகழ்வானது பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ள நிலையில் பாடசாலை அதிபர் திரு.நவரட்னம் நுவரெலியா வலயகல்வி பணிபாளரினதும் பொலிஸாரினதும் கவனத்துக்கு கொண்டுவரபட்டது.
அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் எனபொதுச்செயலாளர் சி.இரவிந்திசந்திரன் தெரிவிதார்.
(டிசந்ரு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here