சமூர்த்தி உத்தியோகத்தர்கள் வேலை நிறுத்தம் செய்து தொழிற்சங்க போராட்டம்

0
159

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடு பூராகவுமுள்ள சமூர்த்தி உத்தியோகத்தர்கள் 09.08.2018 அன்று வேலை நிறுத்தம் செய்து தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.வேலை நிறுத்தம் காரணமாக சமூர்த்தி பிரஜா வங்கி, வலய காரியாலயங்கள் மற்றும் பிரதேச சமூர்த்தி காரியாலயங்கள் என்பன 09.08.2018 அன்றைய தினம் மூடப்பட்டுள்ளன.

அந்தவகையில் மலையகத்திலும் அட்டன், நோர்வூட், தலவாக்கலை, நுவரெலியா போன்ற சமூர்த்தி காரியாலயங்கள் மூடப்பட்டிருந்தன.

அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை குறைக்காதிருத்தல், ஓய்வூதியத்தை உறுதிப்படுத்தல் நியமனக் கடிதங்களை வழங்கல், பதவி உயர்வு முறையை செயற்படுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்து அவர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here