புலமைப் பரிசில் உதவித் தொகையைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ளும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள்- மு.இராமச்சந்திரன் தெரிவிப்பு

0
197

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் புலமைப் பரிசில் உதவித்தொகையை பெற்றுக்கொள்வதில் பெருந்தோட்ட தொழிலாளர் பிள்ளைகள் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர்.

அத்துடன் கல்வி அமைச்சினால் தற்போது நடைமுறையிலுள்ள தொழிலாளப் பிள்ளைகளுக்காக வழங்கும் புலமைப்பரிசில் திட்ட முறையில் தனியாள் வருமனத்தை தற்கால சம்பள அதிகரிப்பு , வாழ்க்கை செலவிற்கேற்ப திருத்தத்தை உடனடியாக கொண்டுவர கல்வி அமைச்சு , குறிப்பாக மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றம் சென்ற கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இரதாகிருஸ்னன் இது தொடர்பில் கவனஞ் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்வதாக நேர்வூட் பிரதேச சபை உறுப்பினர் மு.இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற நோர்வூட் பிரதேச சபைகூட்டத்தில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

ஆண்டாண்டு காலமாக ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களினால் கொண்டுவரப்படும் உதவித்திட்டங்கள் மலையக பெருந்தோட்ட தொழிலாளர் சமூகம் பெற்றுக்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்குகின்றனர் அந்த வகையில், ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் புலமைப் பரிசில் உதவித்தொகையை பெற்றுக்கொள்வதில் பெருந்தோட்ட தொழிலாளர் பிள்ளைகள் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர் .

நீண்டகாலமாக இருந்துவரும் சட்ட திட்டத்துக்கு அமைய புலமைப்பரிசில் உதவித்தொகையானது மாதாந்தம் 4500ரூபா வருமானம் பெறும் தொழிலாள பிள்ளைகள் பெற்றுக்கொள்ள முடியும் என கல்வியமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெருந்தோட்ட தொழிலாளர் பிள்ளைகள் மேற்படி உதவித்தொகை பொற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், கிராம புறங்களுக்கு மாத்திரமே இத்திட்டம் சென்றடைகின்றது.

கடந்த காலத்தில் தனியாள் வருமனத்தை கொண்டும், வாழ்க்கைச் செலவைக் கொண்டும் நிர்ணயிக்கப்பட்ட மாதாந்த வருமானம் தற்கால வருவாய்,வாழ்க்கை செலவிற்கு ஏற்புடையதாக இல்லை . கடந்த வருடத்திற்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஒஸ்போன் தமிழ் வித்தியாலயத்தில் 5 மாணவர்கள் சித்தி பெற்று பாசடாலைக்கும் பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்ததையிட்டு இந்த சபையில் அவர்களை வாழ்த்துக்கின்றேன்

ஆயினும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் என்றபடியால் அவர்களுக்கான புலமைப் பரிசில் திட்ட உதவித்தொகைக்கான அனுமதி பத்திரத்தில் பிரதேச கிராம உதியோகஸ்தர் கையொப்பம் இட மறுத்து விட்டார் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் . அத்தோடு குறித்த மாணவர்களின் பெற்றோர் தோட்ட தொழிலாளி என்பதனால் அவர்களுக்கான மாதாந்த பற்றுச்சீட்டில் 4500 ரூபாய்க்கு மேற்பட்ட வருமானம் காட்டப்படுவதானால் கிராம சேவகரினால் கையொப்பமிட்ட மறுத்துள்ளதுடன் சிறுவர் நிலையத்தில் தற்காலிகமாக கடமையாற்றும் பெற்றோர் ஒருவரின் பிள்ளைக்கும் மறுக்கப்பட்டுள்ளமையையும் இங்கு கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

கிராம புறங்களில் வாழும் மேசன் பனியளர்கள் நாட்கூலியாக இனம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான மாதாந்த பற்றுச்சீட்டு இல்லாமையினால் அவர்கள் வருமானம் குறைந்தவர்களாக கிராம உத்தியோகஸ்தரினால் அடையாளம் காட்ட முடிகின்றது. எனினும் மேசன் ஒருவர் நாளொன்றுக்கு 1500 தொடக்கம் 2000 ரூபா வரையில் சம்பளத்தை பெறுகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்

ஆகவே புலமைப்பரிசில் மாணவர்களுக்கு நன்மை கிட்டும் வகையில் அவர்களுக்கு உரிய தொகையை வழங்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச்சபையினூடாக கேட்டுக்கொள்கின்றேன்.

பொகவந்தலா நிருபர். எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here