தமது அனுமதி இன்றி ஊடகவியாளர்களை அழைத்து வர வேண்டாம் நோர்வூட் தவிச்சாளர் கூறியதாக வெளியான செய்தி திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ரவி குழந்தைவேல் தெரிவித்தார்.
பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் ஊடகவியலாளர்களாக பணியாற்றுவதுடன், அவர்கள் சபை நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு அறிக்கையிடும் போது அனுமதி பெற வேண்டும் என்பதே பிரேரணையாக கொண்டுவரப்பட்டதாக நோர்வூட் தவிசாளர் ரவி மேலும் குறிப்பிட்டார்.
நோர்வூட் பிரதேசசபையின் அமர்வின் போதோ அல்லது சபைதொடர்பான விடயங்கள் குறித்தோ சபையின் தவிசாளரின் அனுமதி பெறாது உறுப்பினர்களாக அங்கம் வகிக்கும், ஊடகவியலாளர்கள், அவர்களின் விருப்பத்திற்கேற்ப ஊடகங்களுக்கு அறிக்கையிட முடியாது என 24.08.2018.வெள்ளிகிழமை இடம்பெற்ற அமர்வின் போது நோர்வூட்பிரதேசசபை உறுப்பினர்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
நோர்வூட் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு இன்று 24.08.2018. வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சபையின் உதவி தவிசாளர் தட்சணா மூர்த்தியினால் கிஷோகுமாரினால் கொண்டுவரபட்ட பிரேரனை சபை, அமர்வின் போது முன்வைத்த போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
சபையினால் எடுக்கபட்ட தீர்மானத்திற்கு அனைத்து உறுப்பினர்களும் இந்த பிரேரனையை ஏற்கொண்டமை குறிப்பிடதக்கது.
எனினும், இன்று கொண்டுவரப்பட்ட பிரேரணையே திரிபுபடுத்தப்பட்டு, தவிசாளரின் அனுமதியின்றி ஊடகவியலாளர்களை அழைத்துவர வேண்டாம் என்ற செய்தி வெளியாகியுள்ளதாக சபையின் தவிசாளர் மேலும் குறிப்பிட்டார்.
– பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்