சாப்பிடுவதற்கு ஒன்றுமில்லாத விரக்தியில் தாயை கல்லால் அடித்த 11வயது சிறுவன் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது!!

0
178

பெற்றதாயை கல்லால் எறிந்து காயபடுத்திய 11வது மகனை பொகவந்தலாவ பொலிஸார் 24.08.2018.வெள்ளிகிழமை காலை 09.30மணி அளவில் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது பொகவந்தலாவ கல்வகந்த தோட்டத்தைச் சேர்ந்த 11வயது மாலேவ் என்ற சிறுவனின் தாயான மாரியாய் விபத்தில் ஒன்றில் அவரின் வலது கை நரம்பு முறிவடைந்த நிலையில் தொழிலுக்கு செல்லாது வீட்டில் இருப்பதாகவும் இந்த சிறுவன் அயல்வீடுகளில் சென்று தொழில்புரிந்து நாளாந்தம் தனது தாயிக்கும் தங்கைக்கும் உணவு தேடி கொண்டு வந்து கொடுத்துள்ளதாகவும் வழமை போல் இன்றையதினம் உண்பதற்கு ஒன்றும் இல்லாத கோபத்தில் பசியில் இருந்த இந்த 11வயது சிறுவன் தனது தாயை கல்லாள் எறிந்து காயபடுத்தியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது

இதேவேலை இந்த 11வயது மாலேவ் என்ற சிறுவன் பாடசாலைக்கு செல்வதில்லையெனவும் பாடசாலைக்கு செல்லும் ஆசையிருந்தாலும் கற்றல் நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு புத்தகங்களை பெற்று கொடுக்க வழியில்லை எனவும் தெரிவிக்கபடுகிறது.

சிறுவனின் தந்தை கொழும்பு பகுதியில் தொழிபுரிந்து வருவதாகவும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வீட்டுக்கு வந்து தனது மனைவியையும் பிள்ளைகளையும் பார்த்து விட்டுசெல்வதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

கைது செய்யபட்ட சிறுவன் 25.08.2018.சனிகிழமை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபட உள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here