மஸ்கெலியா நகரில் சேகரிக்கபடுகின்ற குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லாவிட்டால் மஸ்கெலியா பிரதேசசபைக்கு முன்பு கொண்டுபோய் கொட்டவும் மஸ்கெலியாவில் இடம் பெற்றமக்கள் சந்திப்பின் போது ஜக்கிய தேசிய சுதந்திர முன்னனியின் தலைவர் மைத்திரி குனரத்ன தெரிவிப்பு
மஸ்கெலியா பிரதேசசபைக்குட்பட்ட மஸ்கெலியா நகரம் இன்று வெறும் குப்பைகள் குவிந்து காணபடும் நகரமாக காட்சி அளிப்பதாகவும் மஸ்கெலியா நகரில் காணப்படுகின்ற குப்பைகளை கொட்டுவதற்கு பொறுத்தமான இடம் ஒன்றை மஸ்கெலியா பிரதேசசபையினால் தெரிவு செய்யபட முடியாவிட்டால் மஸ்கெலியா பிரதேசசபைக்கு முன்பு கொண்டு போய் குப்பைகளை கொட்டுமாறு ஜக்கிய தேசிய முன்னனியின் தலைவரும் அதன் செயலாளருமான மைத்திரி குனரத்தன தெரிவித்தார்
25.08.2018. சனிகிழமை மஸ்கெலியாவில் ரோயல் மண்டபத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்
இந்த சந்திப்பின் போது நுவரெலியா மாவட்ட ஜக்கிய தேசிய சுதந்திர முன்னனியின் அமைப்பாளர் வைத்தியர் கிஷான் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் மஸ்கெலியா பிரதேசசபை உறுப்பினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர் இதன் போது மக்கள் மத்தியில் மேலும் உரையாற்றிய மைத்திரி குனரத்ன மக்களுடைய வாக்குகளை பெற்று கொண்டு எங்களது கட்சியின் ஊடாக மஸ்கெலியா பிரதேசசபைக்கு உறுப்பினராக தெரிவு செய்யபட்ட உறுப்பினர் மஸ்கெலியா பிரதேசபையின் தவிசாளரின் பேச்சை கேட்டு கொண்டு வழங்கபடுகின்ற வேதனத்தை பெற்று கொண்டு வருவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை மக்களுக்காக சேவையினை செய்யவேண்டும்
இன்று நான் வந்த மஸ்கெலியா நகரை சற்று அவதானித்து பார்த்தேன் நகரில் உள்ள கழிவு நீர் இந்த பிரபல்யம் வாய்ந்த மவுசாகலை நீர் தேக்கத்தில் கலக்கபடுகிறது அப்படி கலக்கபடுவதால் எமது மக்கள் பெரிதும் பாதிக்கபடுகின்றனர்
எமது கட்சியனர் சார்ந்த மஸ்கெலியா பிரதேசசபை உறுப்பினருக்கு ஒன்றை நான் தெரிவிக்கின்றேன் இரண்டு மாதங்களில் சிறிய ஒரு டெக்டரியினை பெற்று இந்த மஸ்கெலியா நகரில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கட வேண்டும் அவ்வாறு மக்களுக்கான சேவையினை செய்தால் மாத்திரமே நாம் மக்களுக்கு சேவையினை செய்ததாக மக்கள் உணருவார்கள்
இன்று மஸ்கெலியா பிரதேசசபையை இலங்கை தொழிலாளர் காங்ரஸ் கைபற்றியிருக்கிறது பிரதேசசபையை கைபற்றியிருக்கிறது மஸ்கெலியா நகரத்தை குப்பை குழியாக மாற்றுவதற்கு அல்ல இந்த புனிதமான நகரத்தை சுத்தமாக வைத்து கொள்வதற்காகத்தான் பிரதேசசபையை கைபற்றினார்கள்
ஆனால் நான் ஒன்று கூறுகின்றேன் எமது கட்சியின் ஊடாக மக்களுக்கு முறையான சேவைகளை செய்தால் அடுத்து வருகின்ற தேர்தலின் போது இந்த மஸ்கெலியா பிரதேசசபையை எமது கட்சிக்கு மக்கள் அனுமதி வழங்குவார்கள் என மைத்திரி குனரத்ன மேலும் தெரிவித்தார்
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)