புதியசட்ட மூலத்தை தோற்கடிக்கபட்டமையினால் நாட்டின் ஜனாதிபதி தமது பதவியை ராஜினாம செய்யவேண்டும்- மைத்திரி குனரத்ன ஆவேசம்!!

0
174

பாராளுமன்றில் கொண்டுவரபட்ட புதிய சட்டமூலம் தோற்கடிக்கபட்டமையினால் நாட்டின் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன அவர்கள் தமது பதவியினை ராஜினாமா செய்யவேண்டுமென ஜக்கிய தேசிய சுதந்திர முன்னனியின் தலைவர் மைத்திரி குனரத்ன தெரிவித்தார்.25.08.2018.சனிகிழமை மாலை மஸ்கெலியா ரோயல் மண்டபத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின்போது கலந்து கொண்டு உரையாட்டும் போதே இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் உறையாற்றி மைத்திரி குனரத்ன இந்த நாட்டின் ஜனாதிபதி மக்களுக்கு ஒரு வாக்குறுதியை வழங்கினார். இந்த வாக்கெடுப்பு முறையை மாற்றியமைக்க போவதாக கூறி நேற்றயதினம்(24.08.2018)பாராளுமன்றில் இடம்பெற்ற மாகாணசபைக்கான வாக்கெடுப்புமுறைமையினை கொண்டுவரபட்ட சட்டமூலத்தை ஜனாதிபதியின் கட்சியை சார்ந்த ஒருவரால் தோற்க்கடிக்கபட்டது. இது இவ்வாறு இருக்க ஜனாதிபதியினால் மக்களுக்கு வழங்கபட்ட வாக்குறுதி உடைத்தெரியபட்டுள்ளது அமைச்சர் பைஷர்முஸ்த்தப்பா சட்டமூலத்தை கொண்டுவந்து சட்டத்திற்கு எதிராக அமைச்சர் வாக்களித்தார். என தெரிவித்தார்.

பிரதேசசபை மற்றும் நகரசபைகள் எவ்வித பாதிப்புகளும் இல்லாமல் வழிநடத்தபட்டு கொண்டிருந்தது ஆனால் இன்று பிரதான கட்சிகள் அனைத்தும் அதாவது ஸ்ரீலங்கா சுதந்திரகட்சி ஜக்கிய தேசிய கட்சி ஆகிய இரண்டு பிரதான கட்சிகளும் புதியமுறையிலான பிரதேசசபைகளை அறிமுகபடுத்தியதில் தோல்வியை கண்டு மீண்டும் பழைய வாக்கெடுப்பு முறைமைக்கு செல்லவேண்டியுள்ளது. புதிய வாக்கெடுப்பு முறைகளை கொண்டுவந்ததன் பிறகு அனைத்து அரசியல்வாதிகளும் பொதுமக்களுடைய பணத்தை கொள்ளையிடுவதிலே ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மக்கள் மீதும் இந்த நாட்டின் மீதும் எவருக்கும் அக்கரை கிடையாது அனைத்து அரசியல்வாதிகளும் தங்களுடைய பலத்தினை அதிகரித்து கொள்வதற்கான வேலையினை மாத்திரம் செய்துவருகின்றனர். இந்த நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டுவந்து இந்த வாக்கெடுப்பு முறையை மாற்றுவதாக கூறி வழங்கிய அந்த வாக்குறுதி நேரடியாக குப்பை தொட்டிக்குள் சென்றுள்ளது ஆகையால் ஜனாதிபதி அவர்களுக்கு ஒன்றை சொல்லி கொள்ள விரும்புகின்றோம் வழங்கபட்ட வாக்குறுதியினை உடைத்தெரிய வேண்டாமெனவும் வழங்கபட்ட வாக்குறுதிகளை குப்பை தொட்டியில் போடவேண்டாமெனவும் வழங்கபட்ட வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் இந் நாட்டின் பதிய வாக்கெடுப்பு முறைமையை மாற்றுங்கள் எனவும் தெரிவித்தார்.

டி.ஜ.ஜீ.லத்திப் என்பவர் இந்நாட்டின் பொலிஸ்தினைக்களத்தின் பொலிஸ்மா அதிபராக வரகூடிய தகமையுடையவர் ஆனால் தற்பொழுது உள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர என்பவர் பொலிஸ் திணைக்களத்தை எவ்வாறு முன்னெடுக்கபோகிறார். என்பதை பகல் கனவுகாண்கிறார். நாங்கள் சரத்பொன்சேக்காவை மதிக்கின்றோம. காரணம் யுத்தத்தை நிறைவுசெய்ய உதவியாக இருந்தார். ஆனால் தற்பொழுது சரத் பொன்சேக்கா என்பவர்தான் சட்டிகடையில் மண்போன்று காட்சியளிப்பதாக ஐக்கிய தேசிய சுதந்திர முன்னனியின் தலைவர் மைத்திரீ குனரத்தன குறிப்பிட்டார்.

 

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்);

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here