நோர்வூட் பிரதேசசபைக்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா- அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கும் சபைத்தலைவர்

0
154

நோர்வூட் பிரதேச சபை புதிய கடிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுப்பதாகவும்  நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட  பகுதித்திலுள்ள தோட்ட காணிகளை அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் சபையின் அனுதியை பெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நோர்வூட் பிரதேசசபை தலைவர் கே.கே.ரவி தெரிவித்தார்

நோர்வூட் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு 24.08.2018 இடம்பெற்ற போது சபையின் உபத்தலைவர் கிசோக்குமார் நோர்வூட் கிளங்கள் வைத்தியசாலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத கடைத்தொகுதிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் போது, சபை தலைவரினால் அண்மையின் நோர்வூட் கிளங்கன் பகுதிதோட்ட காணியை தோட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி அரசாங்க அதிபரினால் வெளியாருக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் அத்தோட்ட மக்களினால் எதிர்ப்பு ஆர்பாட்டமொன்றும் எடுக்கப்பட்டது.

எனவே இனிவரும் காலங்களில் இவ்வாறான விடயங்கள் இடம்பெற அனுமதிக்க முடியாது என்பதுடன் தோட்ட காணியை அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் சபையனுமதி பெற வேண்டும் என சபை தலைவனால் அறிவிக்கப்பட்ட நிலையில் சபை உறுப்பினர்களின் ஆதரவுடன் மேற்படி பிரேரணை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சினூடாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ஆறுமுகம் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க 30 மில்லியன் ரூபா திதியொதுக்கீட்டில் நோர்வூட் பிரதேசசபைக்கான புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா 15..09.2018 இடம்பெறவுள்ளது. நிகழ்விற்கு அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறும் சபைத்தலைவரினால் அழைப்பு விடுக்கப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here