மக்கள் பணியை தொடர்ந்து தைரியமாக முன்னெடுப்பேன் : நோர்வூட் பிரதேச சபைத் தலைவர்!!

0
194

எந்த இடையூறுகள் வந்தாலும் மக்கள் பணியை தொடர்ந்து தைரியமாக முன்னெடுப்பதாக நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ரவி குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.நோர்வூட் பிரதேச சபை அமர்வுகளின் போது ஊடகவியலாளர்கள் அனுமதிபெற்ற பின்னரே அழைத்துவரப்பட வேண்டும்” என திரிபுபடுத்தப்பட்ட செய்தியொன்று வெளியானதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பிரதேச சபையில் உறுப்பினராகவும், வெளியே ஊடகவியலாளராகவும் செயற்படுவோர், சபையின் அனுமதியைப் பெற்ற பின்னர் சபைத் தகவல்களை வெளியே பதிவிட வேண்டும் என்ற கோரிக்கையே முன்வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நோர்வூட் பிரதேச சபை தவிசாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”நான் என்றும் ஊடகத்துறையை மதிப்பவன்.சில பிழையான தலைப்பு செய்திகளினால் தவரான விமர்சனங்கள் ஏற்படுகின்றது .

நேற்று(24/08/2018) நடைபெற்ற சபை அமர்வில் இரண்டு ஊடகவியலாளர்களுக்கு அழைப்பு விடுத்து அவர்களும் வந்திருந்த தருவாயில் தான் சபைகூட்டம் ஆரம்பமானது. உள்ளூராட்சி சட்டத்தின் கீழ் .ஒரு ஊடகவியலாளர் ஒரு சபை அமர்வில் செய்தி திரட்ட வேண்டுமானால். அவர் முன்கூட்டியே சபை செயலாளரிடம் அனுமதியை பெற வேண்டும். (சட்டம் ) 24ஆம் திகதி நடந்த கூட்டத்தில் கௌரவ உப தவிசாளர் கிசோர்குமாரினால் ஊடக சம்மந்தமான பிரேரனை முன் வைக்கப்பட்டது. அப்பிரேரனையானது இந்த சபையில் கௌரவ உருப்பினராக பிரதிநிதித்துவம் படுத்தும் யாராவது ஒருவர் ஊடகவியலாளராக இருந்தால் இச்சபை கூட்டத்தின் செய்திகளை அனுப்பும் போது அவர் சபை செயலாளரிடமோ அல்லது தவிசாளரிடமோ அனுமதி பெற்று அவ் செய்தியை பிரசுரிக்களாம்.

இது சபை கௌரவ உறுப்பினர்கள் அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. காரணம் கடந்த காலங்களில் இணையத்தளங்களில் சில உறுப்பினர்கள் தன்னிச்சையாக அவர்களின் செய்தியை மாத்திரமே உன்மை தகவல்களின்றி பிரசுரிக்கின்றனர். சபை கூட்டத்தில் நடக்கும் ஒவ்வொரு விடயங்களும் ஒளி நாடாக்களில் பதிவு செய்யப்பட்டு(அன்சாட்) கடந்த கால சபை அறிக்கை மீண்டும் கௌரவ உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் எந்த ஒரு செய்தி நிறுவனமும் அன்சாட்களில் பதிவான விடயங்களை தேவைப்படும் பட்சத்தில் தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளவும் முடியும். நான் உண்மையாகவும் நேர்மையாகவும் இந்த பிரதேச மக்களின் அடிப்படைத்தேவைகளை பிரதேசசபை சட்டத்திற்கு ஊடாகவும் மற்றும் பொது மக்களின் கருத்துக்களையும் உள்வாங்கி முன்னெடுக்க வழிவகைகளை செய்துகொண்டிருகின்றேன்.

சில ஊடகவியளாலர்கள் பிழையான தலைப்பு செய்திகள் எழுதுதலின் மூலமாக, நான் நேர்மையாகவும் உண்மையாகவும் முன்நெடுக்கும் காரியங்களுக்கு சேறு பூசி விடுவார்களோ என்ற சந்தேகமும், அச்சமும் எழுந்துள்ளது. இருந்தபோதிலும் நான் எடுத்த முயற்சியை இந்த கௌரவ பதவியின் மூலமாக நிச்சயமாக இடைவிடாது செய்து முடிப்பேன் என்ற நம்பிக்கையும் தைரியமும்உண்டு.” என்று தெரிவித்துள்ளார்.

 

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here