நீண்ட காலமாக காணப்பட்ட அக்கரப்பத்தனை மலசல கூட பிரச்சினைக்கு தீர்வு!

0
185

அக்கரப்பத்தனை மன்றாசி  நகரத்தில் பல வருடகாலமாக  பிரதேச மக்கள் பாவித்து வந்த மலசல கூட்டம்  உடைந்தும் நீர் வசதிகள் இன்றி காணப்பட்டதால்  பிரதேச மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். 

இந்நகரத்தில் மக்கள்   பயன்படுத்த கூடிய வகையில்  இரண்டு பகுதிகளில்  மலசல கூடங்கள் அமைக்கபட்டியிருந்தன இந்நிலையில்  மதுபான சாலை அமைந்துள்ளது பகுதியில் இருந்த மலசல கூடங்கள்  முன்னால் நுவரெலியா பிரதேச சபை அதிகாரிகள் மற்றும் நகரத்தில் உள்ள சில விசமிகளால் உடைக்கப்பட்டு மலசல கூடம் இருந்த பகுதியில்  கழிவு பொருட்கள்  கொட்டும் இடமாக மாற்றப்பட்டது.  நகரத்திற்கு வரும் பெண்கள் மற்றும் ஏனையவர்களும் பல சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்து  பிரதேசத்தில் உள்ள நபர் ஒருவரினால் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு நுவெலியா மாவட்ட நீதி மன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது.

இது இவ்வாறு  இருக்கையில் நகரத்தில் இயங்கி வந்த நகரகமட்டி உறுப்பினர்கள் இதுதொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வாய்திறக்க முடியாத நபர்களாக இருந்து வந்தமை சுட்டிக்காட்டவேண்டிய விடயமாகும் .
மலசல கூடம் முறையாக இல்லாத காரணமாக பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலைக்கு வரும் கர்ப்பிணி தாய்மார்கள்  பயணிகள் என பலரும் எதிர்நோக்கும் பிரச்சனைகள்  தொடர்பாக சொல்லமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

மலையக அரசியல் வாதிகளும் இதனை கண்டுகொள்ளாமல் இருந்தனர்.
தற்போது புதிதாக உருவாக்கப்பட  அக்கரப்பத்தனை பிரதேசசபையின் தவிசாளர்  சுப்பிரமணியம் கதிர்செல்வன் சபை தவிசாளராக பொருப்பேற்றப்பின் இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை  இணங்கண்டு  அபிவிருத்தித்திட்டங்களை முன்னெடுத்து.

வருவது பாராட்டதக்கவியடமாகும். அந்தவகையில் அக்கரப்பத்தனை மன்றாசி நகரத்தில்  இருந்த மலசல கூட பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் பொருட்டு பல லட்சம் ரூபா செலவில் சகல வசதிகளையும் கொண்ட மலசல கூடம் அமைக்கப்படுகின்றன. இதற்கான அடிகல் நாட்டும் நிகழ்வு  பிரதேச சபை உறுப்பினர் ராமன் கோபால் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்  அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் எஸ் கதிர்செல்வன்  பொலிஸ் நிலைய அதிகாரி  ஆனந்த சிறி  கிராம அபிவிருத்தி சங்க தலைவர்  என் நவராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது சபையின் தவிசாளர் தெரிவிக்கையில் இப்பகுதியில் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவேண்டிய தேவைகள் சபைக்குவுள்ளன  அபிவிருத்தி திட்டங்களை  உடனுக்குடன் செய்வதற்கு  சபை உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன் .- அபிவிருத்தி  திட்டங்களுக்கான  நிதி உதவிகளை  இ.தொ.கா தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் வழங்கியுள்ளார் இவரின் ஆலோசனைகளுக்கு. அமைவாகவே எல்லாம் திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றது. எனவே இந்நகரத்தில் அமைக்கப்படும்  மலசல கூடம் மிகவிரைவில்  புணரமைப்பு செய்யப்பட்டு மக்கள்  பாவனைக்கு வழங்கப்படும் என இவர்மேலும் தெரிவித்தார்.

அக்கரப்பத்தனை நிருபர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here