நோர்வூட் பிரதேசசபைக்கான புதிய கட்டிடத்திற்கான அடிகல் நாட்டும் நிகழ்வு எதிர் வரும் 15ம் திகதி இடம்பெறவிருக்கின்ற வேலையில் 03.09.2018.திங்கள் கிழமை நோர்வூட் பகுதிகளில் அதற்கான காணியினை தெரிவுசெய்யும் நோக்கில் இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் நோர்வூட் பிரதேசத்திற்கு வருகை தந்து பார்வையிட்டார்.
இதன் போது நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் உட்பட மத்திய மாகாணசபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ் பி.பிலிப்குமார் பி.சக்திவேல் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுறை இலங்கை தொழிலாளா் காங்ரசின் பொதுச்செயலாளர் அனுஷியா சிவராஜா இலங்கை தொழிலாளர் காங்ரசின் உதவி பொதுச்செயலாலர் ஜீவன் தொண்டமான் நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் கணபதி ரவி குழுந்தைவேல் மற்றும் பலரும் கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்