டிக்கோயா பிரதேச வைத்தியசாலையின் பாரிசவாத புணர்வாழ்வு சிகிச்சை பிரிவு 04.09.2018.செவ்வாய்கிழமை டிக்கோயா வைத்தியசாலையின் விஷேட வைத்திய நிபுணர் கிக்சிறி கருணாதிலக்க அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கை வைத்தியர் பீடம் தலைவரும் விஷேட வைதத்தியருமான திருமதி. பத்மாகுனரத்தன அவர்களினால் பாரிசவாத புணர்வாழ்வு சிச்சை பிரிவு உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கபட்டதுஇதன் போது டிக்கோயா வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் பலர் கலந்து கொண்டனர் இந்த பாரிசவாத புணர்வாழ்வு சிகிச்சை பிரிவின் ஊடாக பாரிசவாத நோயினால் பாதிக்கபட்டவர்களுக்காக விஷேட உடற்பயிற்சி என்பன வழங்கபட்டுவதுடன் இந்த நோயினால் பாதிக்கபட்டவர்களை மெது மெதுவாக இதில் இருந்து விடுபட செய்யகூடியதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளபட்டு வருவதாக இலங்கை வைத்தியர் பீடத்தின் தலைவரும் விஷேட வைத்தியருமான திருமதி பத்மாகுனரத்தன் தெரிவித்தார்.
இதுபோன்ற பாரிசவாத புணர்வாழ்வு சிகிச்சை பிரிவுகள் நாட்டில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முன்னெடுக்கபட்டு வருவதாக தெரிவித்த அவர் இன்று பாரிசவாத நோயினால் பாதிக்கபட்டவர்கள் மலையக பகுதிகளில் அதிகமாக காணகூடியதாக இருக்கிறது. இந்த நோயினால் பாதிக்கபட்டவர்களை மீண்டும் பழைய முறைக்கு கொண்டு வருவதற்கான வேலைதிட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேலை இந்த பாரிசவாத புணர்வாழ்வு நோயினால் பாதிக்கபட்டவர்களை கடந்த காலங்களில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று ஊசிகளை ஏற்றி அவர்களை நித்திரையில் வைத்தவுடன் அவர்களுக்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாமல் போய்விடுகிறது அதன் காரணமாகத்தான் இது போன்ற புதிய வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்து செல்லவதாக மேலும் குறிப்பிட்டார்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)