மலைநாட்டு வர்த்தகர்கள் கடைகளை அடைத்து 23ஆம் திகதி போராட்டத்துக்கு வலுசேர்க்க வேண்டும் ; மு.ராம் அழைப்பு!
உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்க மறுக்கும் கம்பனிகளுக்கெதிரான கவயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவை வழங்கும் வகையில் மலையக நகர வர்த்தக நிலையங்கள்( கதவடைப்பு) கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுத்து தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்தில் பங்கேற்குமாறு நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர் மு.ராம் தெரிவித்தார்.
முதலாளிமார் சம்மேளனத்துடனான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களுக்கு உழைப்பிற்கேற்ப நியாயமான சம்பளத்தை வழங்கக்கோரி தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் திகாம்பரம் தலைமையில் 23 ம் திகதி தலவாக்கலையில் பாரிய போராட்டமொன்று இடம்பெறவுள்ளது.
இப்போராட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு பிரதேசசபை உறுப்பினர் மு.ராம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)