முன்னாள் அமைச்சர் சஜின் வாஸ் குணவர்த்தனவிற்கு சற்று முன்னர் பிணை வழங்கப்பட்டுள்ளது.
61 கோடி ரூபாய் முறைகேடான சொத்து சேகரிப்பு சம்பந்தமாக இவர் சிறைத்தண்டனைப் பெற்று வந்த நிலையில் இவருக்கு கொழும்பு மேலதிக நீதவான் கிஹான் பிலபிட்டிய பிணையில் விடுதலை செய்துள்ளார்.
மேலும் 5 இலட்சம் ரொக்கப்பிணையிலும், 50 இலட்சம் சரீரப்பிணை நான்கிலும் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.