நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களுடைய ஆலோசனைக்கமைய பூண்டுலோயா ஹெரோ விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டி பூண்டுலோயா ஹெரோ விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் மத்திய மாகாண விவசாய மற்றும் இந்து கலாச்சாரஅமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன் , இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவிப் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோரால் வெற்றி பெற்ற அணிகளுக்கான வெற்றி கேடயங்கள், பரிசித் தொகைகள் வழங்கப்பட்டதை இங்கு காணலாம்.
தலவாக்கலை நிருபர் பி.கேதீஸ்