மலையக பெருந்தோட்டதொழிலாளர்கள் தங்களது கிட்டிய இந்த 200வருட வரலாற்றில் ஒருமுறைகூட திருப்பதியான சம்பள உயர்வொன்று கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் இன்று வரை அவர்களுக்கு இருக்கின்றது இந்நிலையில் பெருந்தோட்டதொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளவுயர்வொன்றை வழங்கக்கோரி தமிழ் முற்போக்கு கூட்டணி போராட்டமொன்றை வரும் 23ம் தலவாக்கலை நகரில் ஏற்பாடுசெய்து அதற்கு ஏனைய அமைப்புகளின் ஆதரவையும் கேட்டுள்ளனர்.இந்த போராட்டம் தனிப்பட்ட கட்சி அரசியல் நலன் சார்ந்த நிகழ்ச்சி நிரல்களுக்குப்பால் தொழிலாளர்களின் உணர்வுகளை பிரதிபளித்து நிற்கும் என்ற நம்பிக்கையில் நாம் பாட்டாளி வர்க்க சிந்தனையை கொண்ட ஒரு கட்சி என்ற அடிப்படையில் ஈரோஸ் அமைப்பும் அதன் தொழிற்சங்க பிரிவான தேசிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியும் இந்த போராட்டத்திற்கு எமது பூரண ஆதரவை தெரிவித்துக்கொள்வதாக ஈரோஸ் அமைப்பின் இணைச்செயலாளரும் மலையக பிராந்திய பொறுப்பாளருமான இரா.ஜீவன் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் இன்று உலகத்திலேயே மிக குறைந்த வேதனத்தை பெரும் தொழிலாளர் கூட்டம் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களே என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது பெருந்தோட்டங்கள் அரச நிருவாகத்தின் கீழ் இருந்தபோதும்சரி கம்பணிகள் பொறுப்பேற்ற பின்பும் சரி ஒரு முறையேனும் உழைப்புக்கேற்ற ஊதியத்தை பெற்று திருப்தியடைந்துள்ளார்களாவென்றால் அதற்கும் இல்லை என்ற பதிலே மேலோங்கி நிற்கும்.
சம்பளவுயர்வு கோரிக்கை தொடர்பாக இதுவரை குறிப்பிட்ட தொழிசங்கங்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்டமைக்கான தகவல்கள் எதுவும் இல்லை இங்கு உழைப்பவர்களின் ஊதியத்தை அவர்களின் சம்மதமின்றி இரண்டு தரப்பினர் மட்டுமே தீர்மானித்து அந்த தொகையை தொழிலாளர்கள் மீது திணித்துவிடுகின்றனர்.
இது வன்மையாக கண்டிக்கப்படவேண்டிய விடயமாகும் ஆகவே தலவகெலை போராட்டத்திற்கு ஆதரவுதெரிவிக்கும் நாம் பின்வரும் கோரிக்கைகளை வழிவுருத்தி நிற்கின்றோம்.
*அடிப்படை சம்பளமாக 1000/=ற்கு மேற்பட்டதொகை உறுதிப்படுத்தப்படவேண்டும்
*பேச்சுவார்த்தை வெளிப்படைத்தன்மையொடு நடைபெரவேண்டும்
*பேச்சுவார்த்தை அரசாங்க மத்தியஸ்ததோடு நடைபெறவேண்டும் அதில் ஏனையதொழிற்சங்கங்களையும் இளைத்துக்கொள்ளவேண்டும்
*பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளும் தொழிற்சங்கள் தங்கள் குழுவில் தொழிலாளர்களையும் இணைத்துக்கொள்ளவேண்டும்
*நியாயமான சம்பளத்தை பெற்றுக்கொடுக்கமுடியாவிட்டால் தோட்டங்களை அவர்களுக்கே உடமையாக்கவேண்டும்
*தற்போதைய ஒப்பந்தம் தொழிலாளர்களுக்கு பாதகமாக இருந்தால் அது இல்லாதொழிக்கப்படவேண்டும் அல்லது திருத்தம்செய்யப்படவேண்டும் பொன்ற கோரிக்கைகளை முனேவைப்பதாக கூறியதோடு தொழிலாளர்கள் தங்களது சம்பளவுயர்வு விடயத்தில் யாரை நம்புவது என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையிலேயே தலவாக்கலை போராட்டம் நடைபெறுகின்றது.
ஆகவே இந்தபோராட்டம் அப்பாவி பெருந்தோட்ட சம்பளவுயர்வு விடயத்தில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்றவகையில்தான் நாமும் இந்தபோராட்டத்தில் பங்குகொள்கன்றோம் எனவும்குறிப்பிட்டார்