லிந்துலை டெல் தமிழ் வித்தியாலயத்தில் புதிய கட்டிட திறப்பு விழா

0
184

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கோட்டம் மூன்று லிந்துலை டெல் தமிழ் வித்தியாலயத்தில் புதிய கட்டிட திறப்பு விழா 28.09.2018 அன்று பாடசாலை அதிபர் எஸ்.பெர்னாண்டோ தலைமையில் இடம்பெற்றது.மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் 60 இலட்சம் ரூபா செலவில் இந்த பாடசாலைக்கு புதிய வகுப்பறைக்கான கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு இ.தொ.காவின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண பதில் முதலமைச்சரும், தமிழ் கல்வி அமைச்சருமான எம்.ரமேஷ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல், அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளர் கதிர்செல்வன், நுவரெலியா வலய மேலதிக கல்வி பணிப்பாளர், அதிகாரிகள், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here