எமது மலையகத்தில் சமீப காலமாக சிறுத்தைகளின் ஆதிக்கம் அதிகமாகவே காணப்படுகின்றது.அந்தவகையில் பொகவந்தலாவ பகுதியில் அடிக்கடி சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
பொகவந்தலாவ செப்பல்டன் பூசாரி தோட்டத்தில் மீண்டும் ஒரு சிறுத்தைபுலி பிடிப்பட்டுள்ளது.ஏற்கனவே இத்தோட்டத்தில் ஒரு நாயால் சிறுத்தைப்புலி பிடிப்பட்டது.
அதே போல இம்முறையும் ஊர் நீர்த்தாங்கி இடத்தில் மீண்டும் ஒரு அதே சம்பவம் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதோடு நாயின் வேட்டையினாலே இச்சிறுத்தை தாக்கப்பட்டதாகவும் ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.