தொழிலாளர் ஒருவரை தாக்க முற்பட்ட முகாமையாளர்; அதை தொடர்ந்து குயினா தோட்டத்தில் பதற்றம்!

0
171

பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்துக்கு கீழ் இயங்கும் பொகவந்தலாவ பொகவான குயினால் கிழ் பிளோரிவு மற்றும் மேற் பிரிவு மக்கள் 04.10.2018.வியாழகிழமை காலை ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுதத்னர்.

பொகவந்தலாவ குயினா கிழ் பிரிவு தோட்டத்தில் உள்ள தொழிலாளர் ஒருவரை தேட்ட உதவி முகாமையாளர் ஒருவர் தாக்க முற்பட்டமை தொடர்பில் இன்று காலையில் இருந்து இந்த மக்கள் தொழிலுக்கு செல்லாது குயினா தோட்ட விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் இந்த இந்த ஆரபாட்டத்தை முன்னெடுத்தனர்

03.10.2018.புதன் கிழமை மாலை வேலை பெய்த கடும் மழையின் காரணமாக பொகவந்தலாவ குயினா கிழ் பிரிவு தோட்டத்தில் இருந்து குயினா மேற் பிரிவு தோட்டபகுதிக்கு செல்லும் பிரதான வீதிக்கு கிழ் இருந்த கால்வாய் சீர்கேடு காரணமாக குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்தினை மேற்கொள்ள முடியாத நிலை கானப்பட்டமையினால் குறித்த கால்வாயினை சீர்செய்ய தொழிலாளர் இரண்டு பேர் வேண்டுமென தோட்டமக்கள் உதவி முகாமையாளரிடம் வலியுறுத்தியபோதே போதே குறித்த உதவி முகாமையாளர் தொழிலாளர் ஒருவரை தாக்க முற்பட்டதாக தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து உதவி முகாமையாளரை மாற்ற கோரி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இவ்விடயம் தொடர்பில் அந்த தோட்டத்தின் முகாமையாளர் நலிந்த அல்விஸ் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது, அவர் தன்னால் அந்த உதவி முகாமையாளரை மாற்ற முடியாது எனவும் தற்காலிகமாக அந்த தோட்டப்பகுதிக்கு வருவதை நிறுத்துவதாகவும் தெரிவித்தார்.

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here