தோட்ட தொழிலாளர்களால் சம்பள உயர்வினை கோரி போகாவத்தை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!!

0
163

மலையக அரசியல்வாதிகள் தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில் முழு மனதோடு செயற்படவில்லை. தமது சுகபோக வாழ்கையை காப்பாற்றுவதற்காகவும் அவர்களின் அரசியலை தக்கவைத்து கொள்வதற்காகவும் கூட்டு ஒப்பந்தத்தை வைத்துகொண்டு காய் நகர்த்துவதாக பத்தனை போகாவத்தை தோட்டத்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.தோட்ட தொழிலாளர்களால் சம்பள உயர்வினை கோரி 08.10.2018 அன்று மேற்படி ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்தனர். காலை 08 மணியளவில் போகாவத்தை நகரத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் சுமார் 01 மணி நேரம் வரை தொடர்ந்துள்ளது.

இதில் 500இற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பதாதைகளை பிடித்தவாறும், கோஷங்களை எழுப்பியும் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தொழிலாளர்கள் தொழிற்சங்க அதிகாரிகள் சந்தாவை வாங்கிகொண்டு தங்களை ஏமாற்றுவதாகவும், சம்பள உயர்வுக்கு தொழிலாளர்கள் போராடி கொண்டிருக்கின்ற போது, எந்த அரசியல்வாதிகளும் கண்டுக்கொள்வதில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

சம்பள உயர்வினை பெற்றுக்கொடுக்கா விட்டால் சந்தா பணத்தினை நிறுத்துவோம் எனவும் ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

போராட்டத்தை நடத்தி சம்பள உயர்வை பெற்றுக்கொள்ள வேண்டுமா என கேள்வி எழுப்பிய இவர்கள், உயர்வினை வழங்காவிட்டால் வீதியில் இறங்கி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here