பெறுந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் 575ரூபா வழங்குவதாகவும் நூற்றுக்கு 75சதவீதம் வேலைக்கு சமூகம் அளித்தால் நாள் ஒன்றுக்கு 105ரூபா வழங்குவதாகவும் ஒரு நாளைக்கு 18கிலோ தேயிலை கொழுந்து பறித்தால்
140ரூபாவும் கொடுப்பனவு தொகை 30ரூபாவும் வழங்குவதாக முதலாளி மார் சம்மேளனம் இன்று அறிவித்து இருந்தது.
அதன் அடிப்படையில் கூட்டுஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்கள் அனைத்தும் இதனை
நிராகரித்து வெளியேறியதாக இலங்கை தொழிலாளர் காங்ரசின் உபதலைவர் எஸ் அருள்சாமி தெரிவித்தார். 09.10.2018.செவ்வாய் கிழமை கொழும்பு ராஜகிரியவில் இடம் பெற்ற முதலாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்தத்தில்
கைச்சாதிடுகின்ற தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம் பெற்ற பேச்சிவார்த்தையின் போது இந்த தீர்மானம் எட்டபட்டதாக தெரிவிக்கபட்டது
தற்பொழுது தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கபடுகின்ற அடிப்படை சம்பளம் போதாது அடிப்படை சம்பளம் தோட்ட தொழிலாளர்களுக்கு 1000ரூபா வழங்கபட வேண்டும் மேலதிக கொடுப்பனவு குறித்து நாங்கள் எதுவும் கலந்தரையாடவில்லை நாங்கள் கேட்பது அடிப்படை சம்பளம் 1000ரூபா வேண்டுமெனவே நாங்கள் கோறியுள்ளதாக தெரிவித்தார் எனவே கடந்த 2016ம் ஆண்டு முதலாளிமார் சம்மேளனத்துடன் செய்து கொள்ளபட்ட கூட்டு ஒப்பந்தத்தின் படி எந்த ஒரு கொடுப்பணவும் இதுவரையிலும் தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கபடவில்லை
இதன் போது இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவிக்கையில் இன்று மலையகத்தில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் குரல் கொடுத்து
வருகின்றனர் தோட்ட தொழிலாளர்களுக்க அடிப்படை சம்பளம் 1000ரூபா வேண்டுமென அதனால் மலையகத்தில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்போடும் வடகிழக்கில் உள்ள பெறும்பான்மை கட்சி தலைவர்களின்
ஒத்துழைப்போடும் அதேபோல் மக்கள் விடுதலை முண்ணனியில் ஒத்துழைப்போடு எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் 1200ரூபா அடிப்படை சம்பளம் வேண்டுமென யோசனை முன்வைக்கபட்டதாக இலங்கை தொழிலளர் காஙூரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
ஆறுமுகன் தொண்டமானால் முன்வைகக்பட்ட யோசனைக்கு பல பிரச்சினைகளை முதலாளிமார் சம்மேளனம் எதிர் நோக்க வேண்டி நேரிடும் எனவும் தெரிவிக்கபட்டதை தொடர்ந்து எதிர் வரும் வெள்ளிகிழமை மீண்டும் பேச்சிவார்த்தைக்கு வருமாறு முதலாளிமார் சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடதக்கது
எதிர்வரும் வெள்ளிகிழமை இடம் பெறும் பேச்சிவார்த்தையில் தீர்க்கமான முடிவு எட்டபாவிட்டால் கட்சி பேதங்கள் இன்றி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் வடகிழக்கு தொழிறசங்கங்கள் மக்கள் விடுதலை முண்ணனி ஆகியோர்
இனைந்து அரசாங்கத்திற்கு ஒரு சவாலை விடுக்க இருக்கின்றோம் தோட்ட தொழிலாளர்களுக்கு 1200ரூபா அடிப்படை சம்பளம் வழங்காவிட்டால் எதிர் வரும் வரவுசெலவு திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கபோவதில்லை என கூறி வெளிநடப்பு
செய்தாக தெரிவித்தார்
இதேவேலை முதலாளிமார் சம்மேளனத்தின் ஊடாக இன்று இடம்பெற்ற பேச்சிவார்ததையின் போது பணிப்பாளர் கனிஷ்க்க வீரதுங்கமற்றும் ரொஷான் ராஜதுறை மற்றும் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)