அக்கரப்பத்தனை பிரதேச சபைக்குட்பட்ட டயகம கொலணியின் குடியிறுப்புகளுக்கு செல்லும் நடை பாதையானது கடந்த காலங்களிள் ஏற்ப்டட் சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இது தொடர்பாக டயகம கொலணி மக்கள் தொகுதியின் அக்கரப்பத்தனை பிரதே சபை உறுப்பினர் ரதிதேவி அவர்களுக்கு தெரியப்படுத்தியதை தொடர்ந்து இ.தொ.கா தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களினதும் அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்ச்செல்வன் அவர்களின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டதை தொடர்ந்து,இப்பாதையை புணரமைப்பு செய்வதற்காக இ.தொ.கா தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அக்கரப்பத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்ச்செல்வன் ஊடாக தொகுதி உறுப்பினர் ரதிதேவி அவர்களினால் இவ்வீதியை புணரமைப்பதற்கான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
-குலசேகர் லீபன்-