மண்சரிவு அபாயத்தை ஏதிர்நோக்கியுள்ள நோர்வூட் நிவ்வெளிகம பகுதியையும் பாதிக்கபட்ட மக்களையும் சந்தித்தார் ஆறுமுகன் தொண்டமான்
அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் பாரிய பாரிய மண்சரிவு அபாயம் இடம் பெறவிருக்கின்ற செய்தியை அறிந்து இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகள் 13.10.2018.சனிகிழமை மதியம் 02.30 மணி அளவில் நோர்வூட் நிவ்வெளிகம பகுதிக்கு திடிர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு மண்சரிவு அபாயத்தினை எதிர் நோக்கிய உள்ள பகுதியையும்
பாதிகக்பட்டமக்களையும் நேரடியாக சென்று பார்வையிட்டு கலந்துரையாடினார்
இதன் போது பாதிக்கபட்ட 06குடும்பங்களை சேர்ந்த 23பேருக்கும் மாற்று காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவிருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான
ஆறுமுகன் தெண்டமான் தெரிவித்தார்.
பாதிக்கபட்ட மக்களுக்கான மாற்று காணிகளை வழங்குவது தொடர்பில் குறித்த காணியினை தேசிய கட்டிட ஆய்வாளர்களின்
அறிக்கை சமர்பித்த பின்பு இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளபடுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)