எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமான் இம் முறை நியாயமான சம்பளத்தை தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்று கொடுப்பார்- வேலு யோகராஜ் தெரிவிப்பு

0
106

பெறுந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்துக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடுகின்ற தொழிற்சங்களுக்கிடையில் இடம் பெற்றுவருகின்ற பேச்சிவார்த்தை தொடர்பில்

இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தோட்ட தொழிலாளர்களுக்கு இம் முறை நியாயமான சம்பளத்தை பெற்றுகொடுப்பார் என நுவரெலியா பிரதேசசபையின் தவிசாளர் வேலு
யோகராஜ் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

அவர் மேலும் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடபட்டுள்ளதாவது இன்று தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை ஒரு முக்கிய பிரச்சினையாக கானப்படுகிறது எனவே புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாதிடபடுவதற்கு முன்பு தற்பொழுது மூன்று கட்ட பேச்சிவார்ததையும் இனக்பாடு இன்றி முடிவடைந்தாலும் இம் முறை நியாயமான சம்பளத்தை எமது தோட்ட தொழிலாளர்களுக்கு எங்கள் தேசிய தலைவர் பெற்றுகொடுப்பார்

தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையை வைத்து கொண்டு இன்று சிலர் எங்கள் தேசிய தலைவர் ஆறுமுகன் தொண்டமானை விமர்சித்து கொண்டு வருகிறார்கள் இலங்கை தொழிலாளர் காங்ரசையும் எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமானை விமர்சிப்பதால் எமது பலத்தினை எவராலும் உடைத்தெரிய முடியாது இன்று இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர்கள் கூறுகிறார்கள் நாங்கள் தான் அரசாங்கம் சம்பளம் விடயம் தொடர்பில் அரசாங்கத்தோடு
கலந்துரையாட போவதாக புச்சான்டி காட்டி கொண்டு வருகிறார்கள்

மலையக மக்களுடைய வாக்குகளை பெற்று அரசாங்கம் பக்கத்தில் அலங்கரித்து கொண்டு இருப்பவர்களுக்கு ஏன் அரசாங்கத்திற்கு அலுத்தம் கொடுக்கமுடியாது மலையக மக்களுடைய வாக்குகளை நாங்கள் மாத்திரம் பெறவில்லை அரசாங்கத்தை பிரதிநிதித்துவம் படுத்துபவர்கள் மக்களின் வாக்குகளை பெற்றவர்கள் ஆகையால் தோட்ட தொழிலாளர்களின் சம்பளவிடயத்தில் ஆறுமுகன் தொண்டமான் அவர்களை விமர்சிப்பதை விட்டு அமைச்சி பதவிகளை துறந்து கூட்டு ஒப்பந்ததில்
கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கு ஒத்தாசை வழங்க முன்வர வேண்டுமெனவும் குறிப்பிட்டார்;

 

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here