மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள தலவாக்கலை வணிகசேகரபுர குடியிருப்பாளார்கள் ஆர்ப்பாட்டம்!!

0
184

மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ள தலவாக்கலை வணிகசேகரபுர குடியிருப்பாளார்கள் தலவாக்கலை நகரில் கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்தலவாக்கலை நகரசபைக்குட்பட்ட மேல்கொத்லை நீர்தேக்க கரையோரத்தை அண்மித்த வணிகசேகரபுர வீட்டுத்திட்ட குடியிருப்பாளர்களே 20.10.2018 அன்று ஆர்ப்பாட்டதில் ஈடுட்டனர்.

குறித்த வணிகசேரபுர பகுதியில் பல தடவைகள் மண்சரவுகள் ஏற்படுள்ளது. மேற்படி குடியிருப்பு பகுதியை அண்மித்து செல்லும் மேல்கொத்மலை நீர்தேக்க கரையோர பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் மாத்திரமே பாதுகாப்பு மதில் அமைக்கப்படுள்ளது. பாதுகாப்பு மதில் அமைக்கப்பாடாத பகுதிக்கு பாதுகாப்பு மதில் அமைக்குமாறு மேல் கொத்மலை நீர்தேக்க பொறியியலாளருடன் கடிதம் மூலமும், வாய் மூலமும் பல தடவைகள் கோரிய போதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

IMG-20181020-WA0053 DSC09415 DSC09407 DSC09404

இந் நிலையில் காலநிலை சீர்கேட்டினால் மலையகத்தில் பல பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. இந் நிலையில் வணிகசேகரபுர குடியிருப்பு பகுதியில் பாரிய வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதுடன், மண்சரிவுகள் ஏற்பட்டு குறித்த பிரதேசம் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளது.

எனவே மேல் கொத்மலை திட்ட பொறுப்பதிகாரிகள் உடனடியாக கரையோர பகுதியில் பாதுகாப்பு மதில் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது பாதுகாப்பான இடத்தில் வணிகசேகரபுர குடியிருப்பாளர்களுக்கு வீட்டுத்திட்டத்தை அமைத்து கொடுக்க வேண்டும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தலவாக்கலை லிந்துலை நகர சபை தவிசாளர் அசோக சேபால மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here