அட்டன் வில்பிரட் வீதி ஊடாக ஹெரோல் தோட்டத்துக்குச் செல்லும் பாதை உரிய வகையில் செப்பனிடப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மலையக புதிய கிராமங்கள் ,உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப ஒதுக்கபட்ட நிதியொதுக்கீட்டில் வில்பிரட் புர வீதியின் ஒரு பகுதி செப்பனிடப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இந்தப்பாதை திறப்பு விழாவில் தொழிலாளர் தேசிய முன்னணியின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் , தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் , மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.ராம் , தொழிலாளர் தேசிய சங்கத்தின் அட்டன் – டிக்கோயா நகரசபையின் உறுப்பினர்களான நந்தகுமார் , பாலசுப்பிரமணியம் , அவிஸ் , ராமேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர்