அட்டன் – டிக்கோயா நகரசபைக்கு உட்பட்ட வில்பிரட்புர பாதை செப்பனிடப்பட்டு 20 நாட்கள் கடந்துள்ள நிலையில் இந்தப்பாதையைப் போக்குவரத்துக்காக இதுவரை திறக்கப்படாத காரணத்தினால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.அட்டன் – டிக்கோயா நகரசபையின் நிதியைக் கொண்டு வில்பிரட் புர பாதையின் ஒரு பகுதி செப்பனிடப்பட்டுள்ளது. இந்தப்பாதையின் போக்குவரத்தைத் தடுக்கும் வகையில் நகரசபையின் டெக்டர் ஒன்று கடந்த 20 நாட்களாக பாதையின் குறுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அரசியல் காரணங்களுக்காக இந்தப்பாதையைத் திறக்காமல் இருப்பது குறித்து பிரதேச மக்கள் அட்டன் – டிக்கோயா நகரசபையின் செயற்பாடு குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர்