தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்காலிக வீதி அமைக்கும் பணி ஆரம்பம்!!

0
203

அட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் நோர்வூட் நிவ்வெளிகம பிரதேசத்தில் ஒரு பகுதி காசல்ரீ நீர்தேக்கத்தில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், மக்களும் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். இதனை கருத்திற் கொண்டு அவ்விடத்தில் தற்காலிக வீதி ஒன்று அமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் 22.10.2018 அன்று பணிகளை முன்னெடுத்துள்ளனர்.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகளவிலான பயணிகள் இப்பிரதேசத்திற்கு வருகை தருவதனால் தற்காலிக வீதி அமைக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி மத்திய நிலையத்தின் அலோசனைக்கமைய நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபை காரியாலயத்தின் ஊடாக இவ்வீதியை வெட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

கடந்த 13ம் திகதி பிரதான வீதியும், அப்பகுதியில் இருந்த 5 வீடுகளும் சரிந்து நீர்தேக்கத்தில் விழுந்ததையடுத்து, அட்டன் – பொகவந்தலாவ, பலாங்கொடை, நோர்வூட், மஸ்கெலியா, சாமிமலை மற்றும் நல்லதண்ணி ஆகிய பிரதேசங்களுக்கு செல்லும் பயணிகள் பல அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.

 

க.கிஷாந்தன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here