பெறுந்தோட்ட தொழிலாளர்களின் கூலி உயர்வை வழியுருத்தி ஹட்டன் வெலிஒயா தோட்டபகுதியை சேர்ந்த இளைஞர் குழு ஒன்று பொகவந்தலாவை நகரில் இருந்து தலைநகர் கொழும்பு வரையான பாதயாத்திரை ஒன்றை 23.10.2018.செவ்வாய்கிழமை 11மணி அளவில் ஆரம்பிக்கபட்டுள்ளது இந்த பாதயாத்திரை எதிர்வரும் ஞாயிற்றுகிழமை நிறைவடையும் என எதிர்பார்க்கபடுவதாக குழுவின் தலைவர் ஜேசுதாஸ் தெரிவித்தார்
இந்த பாதயாத்தியரையானது பொகவந்தலாவ கொட்டியாகலை தேயிலை தொழிற்சாலையில் ஆரம்பிக்கபட்டு பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயூபாணி ஆலயத்தின் முன்பாக சேதுர் தேங்காய் உடைத்து தனது பாதயாத்திரையை ஆரம்பித்தார்
பெறுந்தோட்ட தொழிலாளர்களின் ஒருநாள் அடிப்படை சம்பளம் 1200ருபாவாக அதிகரிக்கபட வேண்டும் என வழியுருத்தி இந்த பாதயாத்திரையை முன்னெடுப்பதாகவும் எமது தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரமர் ஆகியோர் கவனம் செலுத்தி தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்கபட வேண்டும் என கோறிக்கை விடுத்தார்.
இன்று நாட்டின் ஜனாதிபதியையும் பிரதமர் அவர்களையும் மலையக மக்களின் வாக்குகளின் ஊடாகவேதான் தெரிவுசெய்யபட்டார்கள் ஆகவே தான் நான் கூறுகிறோம் தோட்ட தொழிலாளர்களுடைய சம்பள விடயத்தில் நாட்டின் ஜனாதிபதியும் பிரதமரும் கலந்து கொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.
இந்த பாதயாத்திரயின் போது 13 இளைஞர்கள் கலந்து கொள்வதோடு கொழும்பு தலைநகர் பகுதிக்கு செல்லும் வரையில் மலையக இளைஞர் யுவதிகள் இந்த பாதயாத்திரையில் கலந்து கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)