தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளத்தை புதிய பிரதமர் ஊடாக பெற்று கொடுப்போம் என விளையாட்டு மைதானத்தை பொறுப்பேற்றபோது அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவிப்பு
பெறுந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபாவை இந் நாட்டின்
பதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் மூலமாக அமைச்சரான நானும்
பெறுந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் ஆகியோரும்
இனைந்து பெற்று கொடுப்போம் என இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும்
மலைநாட்டு பதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய
அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்
30.10.2018.செவ்வாய் கிழமை இலங்கை தொழிலாளர் காங்ரசின் ஸ்தாபக தலைவர்
சௌமிய மூர்த்தி தொண்டமான் அவர்களின் 19வது சிரார்த்த தினத்தை முன்னிட்டு
நோர்வூட் நகரில் அமைக்கபட்டுள்ள தொண்டமான் விளையாட்டு மைதானம் மற்றும்
ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றை இன்றைய தினம் உத்தியோக
பூர்வமாக பொறுப்பேற்றதன் போதே இதனை தெரிவித்தார்.
இதன் போது அமைச்சர் உட்பட நுவரெலியா மாவட்டபாராளுமன்ற உறுப்பினர்
முத்துசிவலிங்கம் இலங்கை தொழிலாளர் காங்ரசின் பொதுச்செயலாளர்
அனுஷியா சிவராஜா உதவி பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் முன்னால் மத்திய
மாகாணசபை உறுப்பினர்கள் பிரதேசசபையின் தலைவர்கள் பிரதேசசபையின்
உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது மக்கள் மத்தியில் மேலும் உறையாற்றிய அமைச்சர் ஆறுமுகன்
தொண்டமான் நான் அண்மையில் ஊடகங்களுக்கு அறிவித்து இருந்தேன் இம் மாதம்
30ம் திகதி இலங்கை தொழிலாளர் காங்ரசின் ஸ்தாபக தலைவர் சௌமிய மூர்த்தி
தொண்டமான் அவர்களுடைய நினைவு தினம் இன்று அந்தவகையில் தான் தோட்ட
தொழிலாளர்களுடையஅடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா கிடைக்கவிட்டால்
பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து
இருந்தேன்.
ஆனால் நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் தொடர்பாக இந் நாட்டின்
ஜனாதிபதி மைத்திரிபால் சிறிசேன அவர்களினால் புதிய பிரதமர் ஒருவர்
நியமிக்கப்பட்ட பிறகு அவரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க சென்ற வேலையிலே
தோட்ட தொழிலாளர்களுடையஅடிப்படை சம்பளம் ஆயிரம் ரூபா பெற்று தருவதாக
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் உறுதி அளித்ததாக குறிப்பிட்டார்.
இதேவேலை ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதி கடந்த மாதம் மண்சரிவினால்
பாதிக்கபட்ட வீதியை தற்காலிக போக்குவரத்திற்காக குறித்த வீதி இன்று
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களால் திறந்து வைக்கபட்டமை
குறிப்பிடதக்கது
இதேவேலை கடந்த அரசாங்கத்தின் போது விட்டு சென்ற அனைத்தும் மீண்டும்
எங்களுக்கு கிடைக்க பெற்றுள்ளது. இந் நிலையில் மலையக மகக்ளுக்கு உரிய
சேவையினை என்னால் மேற்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)