கடந்த அரசாங்கத்தின் போது மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்டஉட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கிட்டில் மனிதவள அபவிருத்தி ஸ்தாபனத்தின் ஊடாக நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா புளியாவத்த நியூட்டன் தோட்டபகுதியில் புனரமைக்கபட்ட 20தனிவீட்டு திட்டத்திற்குள் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் அத்து மிறி உட்புகுந்துள்ளமையால் நியூட்டன் தோட்ட முகாமையாளர் நோர்வூட்
பொலிஸ்நிலையத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக நோர்வூட்
பொலிஸார் தெரிவித்தனர்
இந்த முறைபாடு 02.11.2018.வெள்ளிகிழமை மாலை பதிவு செய்யபட்டுள்ளதாக
தெரிவிக்கபடுகிறது. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது மலைநாட்டு புதிய
கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால்
நிதுஒதுக்கபட்ட இந்த 20 தனி வீட்டுத்திட்டமும் முன்னால் அமைச்சர் பழனி
திகாம்பரம் அவர்களின் நிது ஒதுக்கிட்டில் ஏழு பேச்சர்ஸ் காணியின் மூலமாக
இந்த வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கபட்டது. ஆனால் கடந்த 26ம் திகதி நாடில்
ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக குறித்த வீடமைப்பு திட்டங்கள்
இலங்கை தொழிலாளர் காங்ரசின் ஆதரவாளர்கள் வசம் போய்விடும் என்ற பயத்தில்
குறித்த தோட்டபகுதியை சேர்ந்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்
அத்துமீறி உட்புகுந்துள்ளதாக நோர்வூட் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில்
இருந்து தெரியவந்துள்ளது
இதேவேலை குறித்த வீடமைப்பு திட்டத்திற்காக எங்கள் சொந்தபணத்தையும்
நாங்கள் செலவு செய்திருக்கின்றோம் தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள
ஆட்சிமாற்றம் காரணமாக இந்த வீடமைப்பு திட்டங்களை இலங்கை தொழிலாளர்
காங்ரசின் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கமுடியாது ஆகவேதான்
நாங்கள் இவ்வாறான ஒரு முடிவை மேற்கொண்டதாக வீடமைப்பு திட்டத்திற்குள்
உட்புகுந்த மக்கள் தெரிவித்துள்ளதாக மக்களிடம் இருந்து பொலிஸாரினால்
பதிவு செய்யபட்டுள்ள வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது
எனவே சம்பவம் தொடர்பில் இதுவரையிலும் எவரும் கைது செய்யபடவில்லை எனவும்
இது தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)