பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களின் பணிப்புரைக்கு அமைய இன்றை தினம் திறைசேரியின் செயலாளரை சந்தித்து தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் மலை நாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதன்போது திறைசேரியின் செயலாளர் வேதன அதிகரிப்பு தொடர்பாக பரிசீலனை மேற்கொண்டு முதலாளிமார் சம்மேளனத்துடனும் கலந்துரையாடி அமைச்சரவை பத்திரயொன்றை தயாரித்து வெகு விரைவில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பில் தீர்க்கமான முடிவு எட்டப்படும் என எதிர்ப்பார்க்கபடுகின்ரது
இச் சந்திப்பில் பெருந்தோட்ட கைத்தொழில் ராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தா நந்த அலுகமகே முன்னால் கைத்தொழில் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம். மற்றும் முன்னால் மத்திய மாகாண விவசாய அமைச்சர் ராமேஸ்வரன் உட்பட இ.தொ.கா வின் முக்கிய சிலர் கலந்துக்கொண்டனர்.